- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்நாவில் எச்சில் ஊற வைக்கும் இடியாப்ப பிரியாணி

நாவில் எச்சில் ஊற வைக்கும் இடியாப்ப பிரியாணி

- Advertisement -

இப்போதெல்லாம் என்ன சாப்பாடு என்றாலே பிரியாணி என்று சொல்லும் அளவிற்கு சாதாரணமாக சொல்லும் வழக்கமாகி விட்டது. முன்பெல்லாம் பிரியாணி என்றால் ஏதாவது விசேஷமான நாட்களில் மட்டும் தான் செய்வார்கள். இன்றைய சூழ்நிலையே வேறு. பிரியாணி ஒரு பிரதான உணவாக மாறி விட்டது. சிறியவர் முதல் பெரியவர் வரை பிரியாணி என்றால் நாவில் சப்புக் கொட்டி சாப்பிட தான் செய்கிறார்கள்.

பிரியாணியில் எத்தனையோ வகைகள் உண்டு. சைவத்தில் எப்படி சிக்கன் மட்டன் போன்றவை இருந்தாலும், அசைவத்திலும் பல வகையான பிரியாணிகள் உள்ளது. இந்த சமையல் குறிப்பு பதிவில் ரொம்பவும் வித்தியாசமான அதே நேரத்தில் எல்லோராலும் எளிதாக செய்யக் கூடிய ஒரு சைவ இடியாப்ப பிரியாணியை எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

வெங்காயம் – 2,
பெரிய தக்காளி – 1,
இடியாப்பம் உதிர்த்தது – 2 கப்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1ஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்,
பிரியாணி மசாலா – 1/2 ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்,
உப்பு – 1/2 ஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
நெய் – 2 டேபிள் ஸ்பூன்,
பட்டை – 2,
கிராம்பு – 2,
பிரியாணி இலை – 1,
கருவேப்பிலை – 1 கொத்து,
கொத்தமல்லி – 1 கைப்பிடி.

செய்முறை

இந்த பிரியாணி செய்ய முதலில் இடியாப்பத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். வீட்டில் இடியாப்ப மாவு இல்லையென்றால், இந்த இடியாப்பமே இப்போது ரெடிமேடாக கிடைக்கிறது. இதில் ஏதாவது ஒரு முறை பின்பற்றி இடியாப்பத்தை தயார் செய்து அதை உதிர்த்து இரண்டு கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதே போல் வெங்காயம் தக்காளி இரண்டையும் நீளவாக்கில் நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் கடாய் வைத்து சூடான பிறகு எண்ணெய், நெய் இரண்டையும் ஒன்றாக ஊற்றி சூடானவுடன் மசாலா பொருட்களை சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள்.

வெங்காயம் வதங்கிய பிறகு கருவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தக்காளி மஞ்சள் தூளும் சேர்த்து தக்காளி குழைந்து வரும் வரை வதக்கிக் கொள்ளுங்கள். இவையெல்லாம் வதங்கிய பிறகு மிளகாய்த் தூள், கரம் மசாலா, பிரியாணி தூள், உப்பு என அனைத்தையும் சேர்த்து இரண்டு நிமிடம் இதன் பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஏற்கனவே உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். இந்த பிரியாணிக்கு தண்ணீர் ஊற்றக் கூடாது. வெங்காயம், தக்காளி மசாலா இவைகள் எல்லாம் வதக்கிய இந்த கலவையிலேயே இடியாப்பத்தை சேர்த்து கலந்தாலே போதும். இப்படி கலந்த பிறகு இரண்டு நிமிடம் மட்டும் அடுப்பில் இருந்தால் போதும்.

அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு மேலே கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி விட்டால் போதும். நல்ல கம கம வென்று வாசத்துடன் சுவையான இடியாப்ப பிரியாணி தயார். இந்த பிரியாணியில் விருப்பப்பட்டால் காய்கறிகளை சின்ன சின்னதாக நறுக்கி தனியாக வேக வைத்து அதையும் சேர்த்து கொடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: பிரண்டை ஊறுகாய் செய்யும் முறை.

இன்னும் ஆரோக்கியமான பிரியாணியாக இருக்கும். இந்த முறையில் ஒரு முறை பிரியாணி செய்து கொடுத்துப் பாருங்கள் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சற்று முன்