- Advertisement -
Homeஜோதிடம்சுக்கிர பகவானால் ஏற்படும் உடல் உபாதைகளும் பரிகாரமும்

சுக்கிர பகவானால் ஏற்படும் உடல் உபாதைகளும் பரிகாரமும்

- Advertisement -

நவகிரகங்களுள் ஒருவராக திகழக்கூடியவர்தான் சுக்கிர பகவான். அவரே பணத்திற்கு அதிபதியாகவும், வசதி வாய்ப்புகளுக்கு அதிபதியாகவும் விளங்கக்கூடியவராக திகழ்கிறார். பொதுவாக சுக்கிர பகவான் பலருக்கும் உடல் உபாதைகளை தருவது கிடையாது. சில அசுப கிரகங்களுடன் ஒன்றாக சேரும் பொழுது மட்டும் உடல் உபாதைகளை தருவார் என்று ஜாதக ரீதியாக கூறப்படுகிறது. இந்த ஜோதிடம் குறித்த பகுதியில் சுக்கிர பகவானால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளும் அதை சரி செய்வதற்குரிய பரிகாரத்தை பற்றியும் பார்ப்போம்.

பொதுவாக சுக்கிர பகவான் என்பவர் வசதி வாய்ப்பிற்கு அதிபதியாக விளங்குகிறார். எவருடைய ஜாதகத்தில் சுக்கிர பகவான் பலமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு நீங்காத அழகு நிலையாக நிலைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதே சுக்கிர பகவான் வலுவிழந்து இருக்கும்பொழுது அவரால் சில உடல் உபாதைகள் ஏற்படும். மேலும் சுக்கிர பகவான் எட்டாம் இடத்தில் இருக்கும் பொழுதும், ராகு, கேது, சனி போன்றோருடன் சேரும் பொழுதும் சில உடல் உபாதைகளை ஏற்படுத்துவார்.

- Advertisement -

சுக்கிர பகவானுக்குரிய இடமாக கருதப்படுவது அடிவயிறு பகுதி, பின் இடுப்பு பகுதியில் கீழ் பாகம் போன்றவை ஆகும். ஒரு ஜாதகத்தில் சுக்கிர பகவான் நீச்சம் அடைந்து விட்டார் என்றால் அவர்கள் திடீரென்று இளமை குறைய ஆரம்பிக்கும். கலை இழந்த முகம் என்று கூறும் அளவிற்கு மாறும். பிறகு ஆண்மை பெண்மை போன்றவற்றிற்கும் சுக்கிர பகவானே காரணமாக திகழ்கிறார். அடிவயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும், கீழ் இடுப்பு பகுதியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கும் சுக்கிர பகவானை காரணமாக விளங்குகிறார். மேலும் தொடைப் பகுதியில் ஏற்படக்கூடிய நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் சுக்கிர பகவானை காரணமாக அமைகிறார்.

ஆண் மற்றும் பெண் உறுப்புகள் சுக்கிர பகவானுக்குரியது என்பதால் அதில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கும் சுக்கிர பகவானின் காரணமாக திகழ்கிறார். மேலும் எலும்புகளுக்கு இடையில் இருக்கும் ஜவ்வு தேய்மானத்திற்கும் சுக்கிர பகவான் காரணமாக விளங்குகிறார். முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் சுக்கிர பகவானின் அருளே. சுக்கிர பகவானின் பலத்தை நாம் பெற்று அவரால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து வெளியில் வருவதற்கு அம்பாளை வழிபட வேண்டும். மேலும் பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானை வழிபடுவதன் மூலமும் சுக்கிர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து வெளியில் வர முடியும்.

- Advertisement -

சுக்கிர பகவானால் ஏற்பட்ட உடல் உபாதைகளை சரி செய்வதற்கும் சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கும் செய்யக்கூடிய பரிகாரம். சுக்கிர பகவானுக்கு இனிப்பு பொருட்கள் மிக மிக பிடிக்கும் என்பதால் இனிப்பு பொருட்களை வாங்கி தானம் தரலாம். மேலும் பழங்களையும் வாங்கி வசதியற்ற ஏழை எளிய குழந்தைகளுக்கு தானம் தருவதன் மூலமும் சுக்கிர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

மேலும் நம்மால் இயன்ற அளவிற்கு அறுசுவை உணவை விருந்தாக வழங்குவதன் மூலமும் சுக்கிர பகவானின் பலம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் பால் சம்பந்தப்பட்ட இனிப்பு பொருட்களை செய்து தானம் செய்வதன் மூலமும் சுக்கிர பகவானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: லட்சுமி கடாட்சத்துடன் நிறைய பணம் சம்பாதிக்கும் எண்காரர்கள்

சுக்கிர பகவானின் அருளை பெற்று அவரால் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளில் இருந்து வெளிவருவதோடு மட்டுமல்லாமல் இழந்த செல்வ செழிப்பையும் ஆரோக்கியத்தையும் இளமையும் மீட்டெடுப்போம்.

சற்று முன்