- Advertisement -
Homeஜோதிடம்எண் கணிதப் பலன்கள்லட்சுமி கடாட்சத்துடன் நிறைய பணம் சம்பாதிக்கும் எண்காரர்கள்

லட்சுமி கடாட்சத்துடன் நிறைய பணம் சம்பாதிக்கும் எண்காரர்கள்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஜோதிடம் எப்படி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறதோ, அது போல எண்களை வைத்து சொல்லப்படும் எண் கணிதம் என்கிற நியூமராலஜிக்கும் அதி முக்கிய பங்கு உள்ளது. ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு சில குணாதிசயங்கள் திறமைகள் இருக்கும். அதை வைத்து ஒருவருடைய பிறந்த தேதியின் கூட்டுப் பலனை வைத்து அவர்களுடைய பலன்களை கணிக்க முடியும்.

அதே போல் எண் கணிதத்தின்படி ஒன்றிலிருந்து ஒன்பது வகையான எண்ணிற்கும் ஒவ்வொரு தெய்வங்கள் அதிபதியாக செயல்படுவார்கள். அந்த வகையில் விதியின் ஆறுக்கு உரியவர்களின் அதிபதியான தெய்வத்தையும் அதன் மூலம் அவர்கள் பெறக்கூடிய பலன்களை பற்றியும் ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணம் சம்பாதிக்க கூடியவர்கள்

6, 15, 24 ஆகிய தேதியில் பிறந்தவர்களுக்கான கூட்டு எண் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கலைத்துறை, இசைத்துறை, நடிப்பு துறையில் நல்ல பேரையும் புகழையும் பெற்று உச்சத்தில் இருப்பார்கள். இவர்கள் மற்ற துறையை விட இந்த துறைகளில் சிறந்து விளங்க கூடிய வாய்ப்பு அதிகம். உலக அளவில் கூட பிரபலமாக பேசப்படுபவர்கள். இவர்கள் பெரும்பாலும் ஆடம்பரமான வாழ்க்கையை தான் விரும்புவார்கள்.

இந்த எண்ணில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் நல்ல பெயரையும் புகழையும் அடைய வேண்டும் என நினைப்பார்கள். அதற்காக அவர்கள் நிச்சயம் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆடம்பர வாழ்க்கை விரும்புபவர்கள் என்பதால் அதற்காக இவர்கள் பெரிய அளவில் உழைக்கவும் தயங்கமாட்டார்கள். இவர்கள் பொழுதுபோக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதையும் ஆடம்பரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் செய்வார்கள்.

- Advertisement -

இந்த ஆறாம் எண்ணுக்கு உரியவர்கள் இயற்கையாகவே ரொமான்டிக்கானவர்கள். ஆகையால் காதலில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் தான் மகிழ்ச்சியாக இருப்பதுடன் தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்திருக்கக் கூடியவர்கள். இவர்கள் மற்றவரை சுலபமாக ஈர்க்கக் கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். நடிப்பில் அதிக ஆர்வம் இருக்கும். இத்தகைய குணாதிசயங்களாலே இவர்கள் அதிக பயணங்களை மேற்கொள்வார்கள். ரொமான்டிக்யுடன் சேர்ந்த ஜாலியான ஆட்கள் தான் இவர்கள்.

இவர்கள் எந்த அளவிற்கு ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்களோ அதே போல் ஆடம்பரமான தொழில் செய்தால் பெரிய அளவில் முன்னேற்றம் அடையலாம். பேஷன் டிசைனிங், துணி வியாபாரம், தங்கம், வெள்ளி போன்ற நகை விற்கும் பணிகள் என ஆடம்பரத்தை அடிப்படையாகக் கொண்ட எல்லா தொழிலும் இவர்களுக்கு நல்ல முறையில் கைகொடுக்கும்.

- Advertisement -

இவை அனைத்திலும் இன்றி இந்த எண்ணுக்குரியவர் அதிபதியாக தெய்வம் எனில் மகாலட்சுமி தாயார் என குறிப்பிடுகிறார்கள். மகாலட்சுமி தாயார் என்றாலே பணவரவில் முதலானவர். அத்தகைய தாயாரின் அனுகூலம் பெற்ற எண்காரர்களான இவர்களுக்கு பணவரவில் குறைவே இருக்காது. இவர்களின் கடின உழைப்பும் முயற்சியும் இவர்களுக்கு நிச்சயம் பணவரத்தை அதிகரித்து தந்து கொண்டே இருக்கும்.

இந்த எண்ணுக்கு குறியவர்கள் எப்படி ஆடம்பரமாக வாழ ஆசைப்படுகிறார்களோ அதற்கு ஏற்றாற் போல் எல்லா அனுகூலமும் வந்து கொண்டே இருக்கும். ஆகையால் இவர்கள் எப்பொழுதும் பணக்கார வாழ்க்கையை வாழ்வார்கள். மகாலட்சுமி தாயாரின் அனுகிரகமும் இவர்களுக்கு எப்போதும் ஏதாவது ஒரு வகையில் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர தாந்திரீக பரிகாரம்

இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எண் கணிதத்தில் உள்ள பொதுவான கருத்துகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. இதுவும் ஒரு சில மாற்றங்களுக்கு உட்பட்டது தான். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். இத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்