பெண்கள் என்றாலே அழகு தான். அதிலும் கெண்டைக்காலுக்கு கீழே நல்ல கருகருவென்று நீண்ட கருங்கூந்தலை கொண்ட பெண்களை பார்க்கும் பொழுது இன்னும் பேரழகியாக காட்சி தருவார்கள். இப்போதெல்லாம் அந்த அளவிற்கு முடியை வளர்க்க முடிவதில்லை. இருக்கும் கொஞ்சம் முடியை பாதுகாப்பதே பெரிய விஷயமாகி போய் விட்டது. இன்றைய சூழ்நிலை ஒரு புறம் முடி உதிர்வை ஏற்படுத்த கூடியதாக உள்ளது. இதில் நம்முடைய பழக்கவழக்கங்களும் உணவு முறைகளும் பங்கு வகிக்கிறது.
முடி வளர்ச்சிக்கான ஆரோக்கியமான உணவையும் அத்துடன் நிம்மதியான உறக்கம் தேவை. அதுமட்டுமின்றி மன உளைச்சல் இன்றி இருப்பதுடன் தேவையற்ற கெமிக்கல் கலந்த பொருட்களை தலைக்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்வதோடு இந்த ஒரு எண்ணையை தொடர்ந்து பயன்படுத்தும் போது முடி வளர்ச்சி அதிகரிக்கும். அது என்ன எண்ணெய் என்பதை அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
முடி வளர்ச்சி அதிகரிக்க
முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய இந்த எண்ணெய் தயாரிக்க நமக்கு ஒரு முக்கியமான இலை தேவை அது வேறோன்றும் கேசவர்த்தினி இலை. கேசவர்த்தினி எண்ணெய் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்த இலையை பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரிந்திருக்கு வாய்ப்பில்லை. இது நர்சரியில் செடியாக கிடைக்கும். இதை வாங்கி வீட்டில் வளர்த்து எண்ணெய் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
செடி வளர்த்து பயன்படுத்த முடியாது என்பவர்கள் நாட்டு மருந்து கடையில் கேசவர்தனின் பொடியை கிடைக்கும் அதை வாங்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்து இந்த எண்ணெய் தயாரிக்க செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் 100 கிராம் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் சிறிதளவு வேம்பால பட்டையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது எண்ணெய்யை தயாரித்து விடுவோம்.
முதலில் ஒரு கைப்பிடி நிறைய கேசவர்தினி இலையை பறித்து சுத்தம் செய்து தனியாக வைத்து விடுங்கள். அடுத்து அடுப்பில் அடி கனமான சில்வர் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் காய விடுங்கள. எண்ணெய் ஓரளவிற்கு காய்ந்த உடனே சுத்தம் செய்து வைத்த கேசவர்தினி இலையை இதில் சேர்த்து விடுங்கள். எண்ணெய் அதிகமான சூட்டில் இருக்கும் போது இலையைப் போட்டால் எண்ணெய் மொத்தமாக வெளியே தெறித்து விடும்.
அது மட்டும் இன்றி எண்ணெய் எப்போதும் மிதமான தீயில் தான் சூடு படுத்த வேண்டும். அதிகமான தீயில் வைத்து எண்ணெய் கொதிக்க விட்டால் எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் முற்றிலுமாக போய் விடும். அதன் பிறகு எந்த பயனும் இருக்காது. இப்போது எண்ணெயில் இந்த கேசவர்த்தினி இலை நன்றாக கொதித்து மொறுமொறுப்பாக மாறி வரும் அதுவரை மிதமான தீயில் காய வேண்டும்.
இந்த எண்ணெய் அடுப்பில் இருந்து இறக்கியவுடன் அதில் வேம்பாளப்பட்டையை போட வேண்டும். இதை அப்படியே ஆற விடுங்கள். இந்த நேரத்திற்குள்ளாக வேம்பால பட்டை கேசவர்த்தினி இலை அனைத்தும் தேங்காய் எண்ணெயில் நன்றாக ஊறி விடும். அதன் பிறகு ஒரு கண்ணாடி பாட்டில் இந்த எண்ணெயை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணையை உறங்கும் முன் தலைக்கு தேய்த்து லேசாக மசாஜ் செய்து விட்டு மறுநாள் காலையில் மைல்டான ஷாம்பு அல்லது சியக்காய் சேர்த்து தலைமுடியை அலசி விடுங்கள்.
இதை இரவில் தேய்த்துக் கொண்டு உறங்க விருப்பம் இல்லாதவர்கள் பகலில் தேய்த்து அரை மணி நேரம் தலையில் ஊற விட்டு அதன் பிறகு அலசி விடலாம். இந்த முறையை வாரத்திற்கு மூன்று நாள் பயன்படுத்தி வந்தாலே போதும்.முடி உதிர்வு பிரச்சனை என்ற பேச்சுக்கு வழியில்லாமல் முடி நன்றாக வளர ஆரம்பிக்கும். கேசவர்தினி இலையில் முடி வளர்ச்சிக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இதையும் படிக்கலாமே: தலையில் இருக்கும் பேன் தொல்லைகள் நீங்க குளிக்கும் முறை.
இத்துடன் வேம்பால பட்டையும் முடி உதிர்வை தடுத்து முடி கருகருவென்று வளர உதவி செய்யும். முடி வளர்ச்சிக்கு நாம் தேவையில்லாத கெமிக்கல் கலந்த எண்ணெய்களை பயன்படுத்தி முடியையும் நம் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்வதற்கு பதிலாக இது போன்ற ஆரோக்கியமான முறையில் முடியை வளர்க்கலாமே.