தலையில் இருக்கும் பேன் தொல்லைகள் நீங்க குளிக்கும் முறை.

pen thollai
- Advertisement -

பள்ளிக்கூடத்திற்கு செல்லும் குழந்தைகளுக்கு பேன், ஈறு பிரச்சனை என்பது மிகவும் அதிகமாகவே இருக்கும். என்னதான் நாம் சீப்பை வைத்து சிவி பேன், ஈறு போன்றவற்ற எடுத்தாலும் மறுபடியும் அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பொழுது மற்ற குழந்தைகளிடமிருந்து அதை வாங்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். வீட்டில் யாராவது ஒருவருக்கு பேன் தொல்லை இருந்தால் அது மற்றவர்களுக்கும் பரவ ஆரம்பித்து விடும். அப்படிப்பட்ட பேன், ஈறு தொல்லைகளில் இருந்து விடுபடுவதற்கு தலைப்பு குளிப்பதற்கு முன்பாக என்ன செய்ய வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக பேன் தொல்லை என்பது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிகவும் எளிதாக பரவிவிடும். அப்படி பரவிவிட்டால் அதனால் தலைமுடியின் ஆரோக்கியம் என்பது சீர்குலைந்து விடும். தலைமுடி உதிர்வு பிரச்சனை அதிகரிக்கும். காரணம் பேன் கடிக்கும் பொழுது நம்மை அறியாமல் நன்றாக தலையை சொரிந்து விடுவோம். நம்முடைய நகங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் படுவதால் அது விரிவிலேயே சேதம் அடைந்து உடைய ஆரம்பிக்கும். இந்த பிரச்சனைகளை நீக்குவதற்கு பல கெமிக்கல் நிறைந்த மருந்து பொருட்கள் இருந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து செய்தால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

- Advertisement -

முதலில் 10 கிராம்பை எடுத்து நன்றாக தூள் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதன் உடன் இரண்டு ஸ்பூன் அளவிற்கு வேப்ப எண்ணையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணையை தலைமுடியின் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதை அப்படியே சிறு குழந்தைகளாக இருந்தால் 15 நிமிடமும் பெரியவர்களாக இருந்தால் 30 நிமிடமும் தலையில் வைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பேன் தொல்லையில் இருந்து நம்மால் வெளிவர முடியும்முடியும்.

15 நிமிடம் கழித்த பிறகு நம் தலை முடியை அலசுவதற்கு தேவையான அளவு சீகக்காய் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு ஸ்பூன் அளவிற்கு சீகக்காய் பொடி எடுத்தோம் என்றால் அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வேப்ப இலை பொடியை சேர்க்க வேண்டும். இவ்வாறு சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு நன்றாக கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த பேஸ்ட்டை நம் தலைமுடியின் வேர் காலிலிருந்து நுனி வரை தடவி ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

அரை மணி நேரம் ஊற வைத்த பிறகு இந்த பேஸ்ட் தலையில் காய ஆரம்பிக்கும். அது லேசாக ஈரப்பதம் இருக்கும் பொழுது குளிக்கச் சென்று விடலாம். வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தி தலையில் சிறிது தெளித்து நன்றாக மசாஜ் செய்து விட்டு குளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பேன் மட்டும் அல்லாமல் ஈறு தொந்தரவில் இருந்தும் நம்மால் வெளியில் வர முடியும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளை முடியை நிரந்தரமாக கருமையாக்க

இதை தொடர்ந்து ஒரு மாதங்கள் வாரத்திற்கு இரண்டு முறை வீதம் செய்து வந்தால் பேன் மற்றும் ஈறு தொல்லைகளில் இருந்து முற்றிலுமாக விடுபட முடியும்.

- Advertisement -