பிரச்சனைகள் இல்லாத குடும்பம் எதுவும் இல்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். அதுவும் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் நான்கு பேருக்கும் நான்கு விதமான பிரச்சனைகள் இருக்கும். இவையெல்லாம் சரி செய்து சமாளித்து நல்ல முறையில் வாழ்வது பெரிய சவால் தான். சில நேரங்களில் பிரச்சனைகள் நாமே சரி செய்து அடுத்த கட்டத்திற்கு சென்று விடுவோம். ஒரு சில நேரங்களில் இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சோர்ந்து போய் விடுவோம்.
இது போன்ற சமயத்தில் நம்மை கை கொடுத்து தூக்கி விடும் தெய்வமாக ஆஞ்சநேயர் இருக்கிறார். அவரை எப்படி வழிபாடு செய்தால் இந்த பிரச்சனைகளிலிருந்து எளிதில் வெளி வரலாம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர
இந்த வழிபாட்டை நாம் செவ்வாய் அல்லது சனி இந்த இரண்டு தினங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு 14 அரச இலையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த இலையில் ஓட்டையோ, கிழிச்சலோ இருக்கக் கூடாது. நல்ல இலையாக எடுத்து வந்து தண்ணீரில் அலசி சுத்தமாக துடைத்து ஈரம் இல்லாமல் காய வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் செந்தூரத்தை கொட்டி அதில் கொஞ்சமாக பன்னீர் ஊற்றி கெட்டியாக குழைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு அரச இலையிலும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற மந்திரத்தை எழுத வேண்டும். அதை எழுதும் போது நீங்கள் மனதார உங்களுடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். இதை அப்படியே மாலையாக கட்டி விடுங்கள்
அடுத்து இந்த மாலையை ஆஞ்சநேயருக்கு சாற்ற வேண்டும். அதற்கு முன்பாக கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு முன்பு ஒரு நெய் தீபம் ஏற்றி வணங்கிய பிறகு இந்த மாலையை சாற்ற சொல்லுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் பெயர் நட்சத்திரம் என அனைத்தையும் சொல்லி அனைவரும் பிரச்சனையும் தீர்ந்து குடும்பம் நல்ல முறையில் சமூகமாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: சொந்தமாக வீடு நிலம் வாங்க வழிபாடு
இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி குடும்பம் சந்தோஷமாக இருக்கும். இதை தவிர்த்து உங்களுக்கு வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தாலும் இந்த வழிபாட்டின் மூலம் அதுவும் தீருவதற்கான வழி கட்டாயம் பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த ஆஞ்சநேயர் வழிபாட்டில் உங்களுக்கும் விருப்பம் இருப்பின் இதை செய்து பலன் அடையலாம் என்ற இந்த தகவலோடு பதில் செய்து கொள்வோம்.