- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்இல்லத்தரசிகளின் வேலையை சுலபமாக்க எளிய டிப்ஸ்

இல்லத்தரசிகளின் வேலையை சுலபமாக்க எளிய டிப்ஸ்

- Advertisement -

அனைத்து இல்லங்களிலும் காலை நேரம் என்பது மிகவும் பரபரப்புக்குரிய நேரமாகவே திகழ்கிறது. காரணம் வேலைக்கு செல்லும் கணவன்மார்கள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் குழந்தைகள் போன்றவர்களுக்கு தேவையான காலை மற்றும் மதிய உணவை தயார் செய்வதே. வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தாலும் சரி வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி இதை செய்வார்கள். இந்த வீட்டு குறிப்பு குறித்த பகுதியில் அப்படி பரபரப்பாக இயங்கக்கூடிய நேரத்தில் செய்ய வேண்டிய வேலைகளை எளிமையாக உதவக்கூடிய டிப்ஸை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பரபரப்பாக இருக்கக்கூடிய நேரத்தில் செய்யக்கூடிய வேலைகளில் பிரச்சனைகள் ஏற்படும் பொழுது தங்களை அறியாமலேயே கோபத்திற்கு ஆளாவார்கள். அந்த நேரத்தில் அவர்களை யாராலும் கட்டுப்படுத்தவே முடியாது. இந்த கோபம் வராமல் தடுப்பதற்கு வேலையை சுலபமாக செய்வதற்கு சில எளிமையான குறிப்புகளை பார்ப்போம்.

- Advertisement -

காலையில் எழுந்து என்ன சமைப்பது என்பதை யோசிப்பதற்கு பதிலாக இரவிலேயே என்ன சமைக்கலாம் என்று யோசித்து அதற்குரிய பொருட்களை எடுத்து வைப்பதன் மூலம் காலையில் ஏற்படக்கூடிய பரபரப்பை குறைக்க முடியும். மேலும் பிளாஸ்டிக்கில் ஒரு அஞ்சறைப் பெட்டியை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதில் பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட் இவை அனைத்தையும் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் சமைக்கும் பொழுது நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் இந்த ஒரு டப்பாவில் இருந்து எடுத்துக் கொள்ள முடியும். காலையில் எழுந்ததும் சமைப்பதற்காக புளியை ஊற போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏதோ ஒரு சூழ்நிலையில் அதை மறந்து விட்டால் குழம்பு வைக்கும் பொழுது புளி கரைசலுக்காக கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

- Advertisement -

அந்த கஷ்டத்தை நீக்குவதற்கு நேரம் கிடைக்கும் பொழுது அதிகமான அளவு புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது கல்லுப்பையும் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜிற்குள் வைத்துவிட தேவைப்படும். தேவைப்படும் பொழுது புளிக்கரைசலை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இதே போல் தக்காளியுடன் சிறிது கல்லுப்பு போட்டு ஆட்டி வடிகட்டி எடுத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் நேரத்தில் தக்காளியையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். காய்கறிகளை வீட்டிற்கு வாங்கி வந்த உடனே அதை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவி தண்ணீர் நன்றாக காய்ந்த பிறகு ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்தால் சமைப்பதற்கு முன்பாக கழுவ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.

- Advertisement -

காலையில் எழுந்த உடனே இந்த காய்கறிகளை வெளியில் எடுத்து வைப்பதன் மூலம் அதனுடைய குளிர்ச்சி தன்மையும் மறைந்துவிடும். அது மட்டுமல்லாமல் 10 நாட்கள் ஆனாலும் காய்கறிகள் வாடாமல் பிரெஷ் ஆக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பழைய வெள்ளி கொலுசு புதுசு போல மின்ன

இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ள குறிப்புகளாக இருந்தால் இதை பயன்படுத்தி உங்களின் நேரத்தையும் வேலையையும் மிச்சப்படுத்தி டென்ஷன் ஆகாமல் காலை வேலையை முடிக்க முடியும்.

சற்று முன்