பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று தான் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள். இந்த முடிகளால் அவர்கள் அசவுகரியமாக உணர்வார்கள். இதற்காக பியூட்டி பார்லர் சென்று வேக்சிங் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் முக சருமத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதை தவிர்த்து விட்டு வீட்டிலேயே எளிமையான முறையில் முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை நீக்குவதற்கும் அதே சமயம் முகத்தை பிரகாசமாக வைப்பதற்கு உதவக்கூடிய பீல் ஆஃப் மாஸ்கை எப்படி செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக கடைகளில் விற்கக்கூடிய பீல் ஆஃப் மாஸ்கை நாம் உபயோகப்படுத்தும் பொழுது முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகள் அனைத்தும் நீங்கி முகத்தில் ஒருவித புத்துணர்ச்சி தெரியும். இதே பீல் ஆஃப் மாஸ்கை பயன்படுத்தி இதனுடன் இரண்டே இரண்டு பொருட்களை நாம் சேர்ப்பதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை நம்மால் நீக்க முடியும்.
இந்த மாஸ்கை செய்வதற்கு நாம் ஏதாவது ஒரு பீல் ஆஃப் மாஸ்கை வாங்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுத்தமான ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு சோளமாவை சேர்க்க வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் துளையும் சேர்க்க வேண்டும். இவை இரண்டையும் நன்றாக கலந்து விட்டு இதில் பீல் ஆஃப் மாஸ்கை போட்டு வேண்டும்.
மாஸ்க் தயார் செய்யும் பதத்திற்கு ஏற்றவாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இதை முகத்தில் கீழிருந்து மேல் நோக்கியவாறு போட வேண்டும். 15 நிமிடம் அப்படியே உலரவிட்ட பிறகு அதை சிறிது சிறிதாக நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த மாஸ்கிலையே நம் முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகள் அனைத்தும் நீங்கிவிடும்.
இதோடு மட்டுமல்லாமல் மூக்கில் இருக்கக்கூடிய பிளாக் ஹேட்ஸ் ஒயிட் ஹேட்ஸ் என்று சொல்லக்கூடிய அனைத்துமே நீங்கிவிடும். இதோடு மட்டுமல்லாமல் முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளும் நீங்கி விடும். முகத்தில் ஒருவித பொலிவும் பிரகாசமும் தென்படும். சோளமாவில் பல சத்துக்கள் இருக்கின்றன. இதை நம் முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகத்தை இருகச் செய்து இளமையுடன் வைக்க உதவுகிறது.
கஸ்தூரி மஞ்சள் முகப்பருக்களை நீக்க உதவுகிறது. அதே சமயம் முகத்தை பிரகாசமாக வைக்கவும் உதவுகிறது. இவை இரண்டையும் நாம் ஒன்றாக சேர்ப்பதன் மூலம் முகம் என்றும் இளமையுடனும் பொலிவுடன் அழகாகவும் தோன்றும். எந்த வகையான பீல் ஆப் மாஸ்கையும் நாம் இதற்கு உபயோகப்படுத்தலாம் என்பது குறிப்பிட தக்கது.
இதையும் படிக்கலாமே: அஸ்வகந்தா ஃபேஸ் பேக்
இந்த எளிமையான பீல் ஆஃப் மாஸ்கை பயன்படுத்தி முகத்தில் இருக்கக்கூடிய தேவையற்ற முடிகளை நீக்குவதோடு முகத்தை பிரகாசமாகவும் வைத்துக் கொள்ளலாம்.