இன்றைய கால சூழலில் ஆண், பெண் சிறுவர் பெரியவர் என பாகுபாடு இன்றி அனைவரும் உள்ள ஒரு பிரச்சனை என்றால் அது இந்த பொடுகு தொல்லை தான். பொடுகு தலையில் சேர்வதற்கு நிறைய காரணங்கள் உண்டு. உடல் சூட்டின் காரணமாக உண்டாகுமம், தலையில் அதிகப்படியான அழுக்கு சேர்வதாலும் மற்றும் நாம் பயன்படுத்தும் தண்ணீர் அழுக்காக இருந்தாலும் வரும். இந்த பொடுகு வர இன்னும் பல காரணங்கள் உண்டு.
ஆகையால் முதலில் இந்த பொடுகு பிரச்சனை எந்த காரணத்தினால் நமக்கு வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதை சரி செய்ய முயற்சி செய்ய வேண்டும் அத்துடன் வீட்டு பெரியவர்கள் பயன்படுத்திய இந்த குறிப்புகளையும் அவ்வப்போது முயற்சி செய்யும் போது பொடுகு தொல்லை முழுவதுமாக நீங்கி முடி வளர்ச்சி அதிகரிக்கும். அது என்ன என்பதை இந்த அழகு குறிப்பு குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொடுகு தொல்லை நீங்க
பொடுகு தொல்லைக்கு கைகண்ட அருமருந்து எனில் அது சின்ன வெங்காயம் தான் இது பலருக்கும் தெரிந்திருந்தாலும் பெரும்பாலும் யாரும் இதை பயன்படுத்துவதில்லை. சின்ன வெங்காயத்தை அரைத்து அதன் சாறை நாம் முடியின் வேர்க்கால்களில் தடவி வரும் போது நிச்சயம் பொடுகு தொல்லைக்கு நல்ல தீர்வு உண்டு.
இந்த சின்ன வெங்காய சாறுடன் நாட்டு முட்டையின் வெள்ளை கருவையும் கலந்து அதை தேய்த்து குளிக்கும் போது பொடுகு நீங்குவதோடு முடி வளர்ச்சி அதிகரித்து முடி நல்ல பலவென்று பார்க்க அத்தனை அழகாக வளரும். ஆனால் இந்த முறையை நாம் பின்பற்றும் போது நீங்கள் ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.
அதே போல் நாட்டு மருந்து கடைகளிலும் பெரிய பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் வெள்ளை மிளகு கிடைக்கும். அதை நன்றாக பாலில் ஊற வைத்து மைய அரைத்து தலையில் தேய்த்து குளிக்கும் பொழுது அதனுடைய காரத்தன்மைக்கு தலையில் உள்ள பொடுகு நீங்குவதுடன் முடியின் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
இத்துடன் பசலை கீரையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்தால் நிச்சயம் பொடுகு தொல்லை கட்டுக்குள் வந்து விடும். அதே போல் தயிருடன் எலுமிச்சை சாறு கலந்து தேய்க்கலாம். இதுவும் நல்ல பலனை தரக்கூடியது தான். இவை குளிர்ச்சித் தன்மை அதிகம் உள்ள பொருள் ஆகைய சைனஸ் பிராப்ளம் உள்ளவர்கள் மழை, குளிர் காலங்கள் இதை தவிர்ப்பது நல்லது.
இவை அனைத்தையும் விட சிறந்த மருந்தேனில் அது வசம்பு தான். இந்த வசம்பை தேங்காய் எண்ணெயில் போட்டு வைத்து நம் தலைக்கு எப்போதும் தேய்ப்பது போல் இந்த வசம்பு எண்ணையை தேய்த்து வரும் போது இதனுடைய வாடைக்கு பொடுகு மட்டுமல்ல தலை முடி சார்ந்த எந்த பிரச்சனையும் இருக்காது. இந்த எண்ணையின் வாடை பிடிக்காது என்பவர்கள் எண்ணையை தலைக்கு தேய்த்து சிறிது நேரம் விட்டு விட்டு அதன் பிறகு சீயக்காய் சேர்த்து முடியை அலசி விடலாம்.
இதையும் படிக்கலாமே: முகச்சுருக்கம் நீங்க ஆன்ட்டி ஏஜிங் கிரீம்
பொடுகுத் தொல்லை நீங்க நம் வீட்டிலே பின்பற்றக்கூடிய இத்தனை வழிமுறைகள் உண்டு. இவற்றில் ஏதேனும் ஒரு வழிமுறையை பின்பற்றி பொடுகு தொல்லை இல்லாமல் இருப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள. இத்துடன் தலை முடி எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பதுடன் தண்ணீர் நிறைய அருந்துவது போன்றவை எல்லாம் சிறந்த பலனை தரும்.