முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கமே வயது முதிர்ச்சிக்கு ஆரம்ப புள்ளி என்று கூறலாம். ஒருவருடைய முகத்தில் சுருக்கம் ஏற்பட்டாலே அவர்களுக்கு வயதாகி விட்டது என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்படும். ஆனால் இன்றைய காலத்தில் கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்களை உபயோகப்படுத்துவதால் விரைவிலேயே முகச்சுருக்கம் என்பது ஏற்பட்டு விடுகிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முகத்தில் இருக்கக்கூடிய அனைத்து வகையான சுருக்கங்களையும் நீக்கக்கூடிய ஒரு ஆன்ட்டி ஏஜிங் கிரீமை தயார் செய்யும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
பொதுவாக கண்களை சுற்றியும், வாயை சுற்றியும், நெற்றிலும் சுருக்கம் என்பது தோன்ற ஆரம்பிக்கும். அப்படி தோன்றும்போது நாம் ஆன்ட்டி ஏஜிங் கிரீமை பயன்படுத்தினால் அந்த சுருக்கமானது விரைவில் நீங்கிவிடும். அப்படி நீங்கி விட்டால் நம்மால் இளமையான தோற்றத்தை பெற முடியும். சரி இப்பொழுது ஆன்டி ஏஜிங் கிரீமை தயார் செய்வது பற்றி பார்ப்போம்.
இந்த ஆன்ட்டி ஏஜிங் கிரீமை தயார் செய்வதற்கு நமக்கு பிரிஞ்சி இலை தேவைப்படும். ஆம் பிரியாணிக்கு நாம் உபயோகப்படுத்தும் இந்த இலையை வைத்து தான் இன்று முகச்சுருக்கத்தை நீக்கும் ஆன்டி ஏஜிங் கிரீமை தயாரிக்கப் போகிறோம். 10 இலைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து இதை வடிகட்டியை பயன்படுத்தி அதன் தண்ணீரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் மூன்று ஸ்பூன் அளவுக்கு சோளமாவை கலந்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி மறுபடியும் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். இது நன்றாக கிரீம் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அதை குளிர வைக்க வேண்டும்.
இது நன்றாக ஆரிய பிறகு இதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லையும், ஒரு டீஸ்பூன் அளவிற்கு தேனையும், ஒரு டீஸ்பூன் அளவிற்கு பாதாம் எண்ணெயும் சேர்க்க வேண்டும். பாதாம் எண்ணைக்கு பதிலாக விட்டமின் ஈ கேப்ஸ்யூல் நாம் சேர்க்கலாம். இப்பொழுது இவை அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். ஆன்ட்டி ஏஜிங் கிரீம் தயாராகிவிட்டது. இந்த கிரீமை கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும்.
இரவு படுக்க செல்வதற்கு முன்பு இந்த கிரீமை எடுத்து சுருக்கங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் நன்றாக தடவி குறைந்தது பத்து நிமிடமாவது மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அதை அப்படியே விட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு வாரத்திலேயே முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் மறைவதை நேரடியாக காண முடியும்.
இதையும் படிக்கலாமே: ரோஜாப்பூ க்ரீம்
இந்த இலை முகத்தில் இருக்கும் சுருக்கத்திற்கு எதிராக போராடி முகத்தை இருகச் செய்வதால் இளமையான தோற்றத்தை பெற முடியும்.