- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் கரைந்து போக கால பைரவர் வழிபாடு

கடன் கரைந்து போக கால பைரவர் வழிபாடு

- Advertisement -

பைரவர் வழிபாடு என்றாலே அது அஷ்டமி அன்று தான். இந்த அஷ்டமியானது மாதத்தில் இரண்டு முறை வரும். அதில் ஒன்று தேய்பிறை அஷ்டமி மற்றொன்று வளர்பிறை அஷ்டமி. நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளத்தை பெருக்கிக் கொள்ளவும் தன ஆகர்ஷணத்தை பெறவும் வளர்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகார்சன பைரவரை வணங்க வேண்டும்

அதே போல் துன்பங்கள் கடன் தொல்லைகள் நீங்கவும் தீய சக்திகள் நம்மை விட்டு ஒழியவும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் இந்த அஷ்டமியில் நாம் நிச்சயமாக கால பைரவரை தான் வணங்க வேண்டும். அப்படியான இந்த தேய்பிறை அஷ்டமியில் கடன் தீர்ந்து பணவரவு அதிகரிக்க காலபைரவரை எப்படி வணங்க வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர கால பைரவரை வீட்டில் வணங்கும் முறை

இந்த வழிபாட்டை இன்று ராகுகால நேரத்தில் செய்ய வேண்டும். பொதுவாக கால பைரவர் வழிபாடு ராகு காலத்தில் செய்யும் பொழுது நல்ல பலனை கொடுக்கும். இந்த அஷ்டமி நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கி இன்று இரவு 7 மணி வரை உள்ளது. ராகு காலமானது மதியம் 1.30 மணியிலிருந்து 3.0 மணி வரை உள்ளது.

இந்த நேரத்தில் பைரவரை ஆலயத்தில் சென்று வழிபடுவது மிகவும் சிறந்தது. அப்படி செல்லும் போது சிகப்பு நிற செவ்வரளி மறக்காமல் வாங்கி சென்று வைத்து வணங்குங்கள். இதே கால பைரவர் வழிபாட்டை நாம் வீட்டில் செய்யும் போது மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும். ஏழு மணி வரை அஷ்டமி உள்ளதால் அதற்குள்ளாக இந்த பூஜை செய்து முடித்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பூஜையை செய்யும் நாள் என்று வீட்டில் அசைவம் சாப்பிட கூடாது. பூஜை அறையை சுத்தம் செய்து தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். காலபைரவர் படம் பெரும்பாலும் யார் வீட்டிலும் இருக்காது. ஆகையால் அகல் விளக்கை காலபைரவராக மனதில் பாவித்து கொள்ளுங்கள். சிவபெருமான் படம் இருந்தாலும் அவரையே கால பைரவராக நினைத்து வழிபடலாம். நெய்வேத்தியமாக நிச்சயம் ஒரு செவ்வாழை பழத்தை படைக்க வேண்டும்.

அதன் பிறகு நான்கு மிளகை உங்கள் வலது கையில் வைத்து இடது கை கொண்டு மூடி கொள்ளுங்கள். அதன் பிறகு விளக்கின் முன் அமர்ந்து கண்களை மூடி ஓம் பைரவாய நமக என்று நாமத்தை 27 முறை சொல்லுங்கள். இப்படி சொல்லி வேண்டிய பிறகு உங்களுடைய கடன் பிரச்சனைகள் தீர்ந்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த நான்கு மிளகையும் உங்கள் வீட்டின் வாசலுக்கு வெளியே கொண்டு சென்று உங்களின் நான்கு புறத்திலும் ஒவ்வொரு இடமாக தூக்கி போடுங்கள். நான்கு மிளகை திசைக்கு ஒன்றாக தூக்கி போடும் போது அது உங்கள் மேல் விழுந்தாலும் பரவாயில்லை. அப்படியே போட்டு விட்டு நீங்கள் வீட்டுக்குள் வந்து விடுங்கள்.

இந்த நான்கு என்ற எண்ணிக்கையானது ராகுவின் அம்சமாக கருதப்படுகிறது. இந்த அஷ்டமி தேதியும் நான்கு பைரவரின் வழிபாட்டிற்குரிய நேரமும் ராகு காலம் இத்தகைய சிறப்பு பொருந்திய இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயம் கடன் அடைந்து பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பாவங்கள் தீர கால பைரவர் வழிபாடு

நான்கு திசையிலும் எரியப்பட்ட இந்த மிளகு கடன் பிரச்சனைகளை முழுவதுமாக தீர்த்து நான்கு திக்கிலும் இருந்து பணவரவை அதிகரித்துக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. பைரவரின் கடன் தீர்க்கக்கூடிய இந்த வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

சற்று முன்