பாவங்கள் தீர கால பைரவர் வழிபாடு

bhairavar dheepam
- Advertisement -

சிவபெருமானின் அம்சமாகவே கருதப்படுபவர் தான் இந்த பைரவர். ஒவ்வொரு தெய்வத்திற்கும் வழிபாட்டிற்கு உகந்த ஒரு நாள் இருக்கும். அதே போல் காலபைரவர் வழிபாட்டிற்கு உகந்த நாளெனில் அது அஷ்டமி தான். அதிலும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வணங்கும் பொழுது நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் உடனே நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் நாளை தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவரை நம் வீட்டில் எப்படி வணங்க வேண்டும் எப்பொழுது வழங்க வேண்டும் என்பது பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பாவங்கள் தோஷங்கள் நீங்க காலபைரவர் வழிபாடு

நாளைய தினம் இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த வேளையில் செய்வது மிகவும் சிறப்பு அல்லது காலை 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக செய்யலாம். அதே போல 10.30 மணியிலிருந்து 11:30 வரை செய்யலாம். இந்த நேரத்தில் செய்ய முடியாதவர்கள் மாலை 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள்ளாக செய்து விடுங்கள். அதன் பிறகு அஷ்டமி திதி முடிந்து விடுகிறது.

இந்த வழிபாட்டிற்கு நாம் ஐந்து வகையான தீபத்தை ஏற்ற வேண்டும். அதை எப்படி ஏற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம். அதற்கு முன்பாக தெய்வத்திற்கு படைக்க உப்பு கலக்காத, தாளிக்காத தயிர் சாதத்தை தயார் செய்து கொள்ளுங்கள். இந்த தீபத்தை உங்களுடைய பூஜை அறையில் ஏற்றலாம். இந்த வழிபாட்டிற்கு பைரவரின் படம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

- Advertisement -

இந்த ஐந்து விளக்குகளை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதற்கென புதிதாக அகல் விளங்க வேண்டாம் வீட்டில் இருக்கும் பழைய அகலையே சுத்தம் செய்து பயன்படுத்தலாம். அதன் பிறகு நெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் ஒவ்வொரு அகலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஐந்து அகலிலும் பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற தயார் செய்து கொள்ளுங்கள். இந்த தீபத்தை பூஜை அறையில் வடக்கு நோக்கி ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் இந்த தீபத்தின் முன்பாக அமர்ந்து ஓம் கால பைரவாய நமக என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

பூஜை முடிந்த பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்கள் பகிர்ந்து உண்ணலாம். இந்த தீபமானது அரை மணி நேரம் கட்டாயமாக எரிய வேண்டும் அதன் பிறகு குளிர வைத்து எடுத்து சுத்தம் செய்து விடுங்கள். நீங்கள் காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் மாலையில் ஏற்ற வேண்டாம். ஒரே ஒரு முறை மட்டும் அரை மணி நேரம் இந்த தீபம் இருந்தால் போதும். அதே போல் இந்த தீபம் ஏற்ற பயன்படுத்தும் இலுப்பை எண்ணையை வேறு நாட்களில் வீட்டில் ஏற்றக் கூடாது.

இதையும் படிக்கலாமே: பண கஷ்டத்தை நீக்கும் தீபம்

காலபைரவரின் அருளை பெற்று நம்முடைய பாவங்கள் இந்த போக்கிக் கொள்ளவும், நம்மை பிடித்த பீடை சரித்திரங்கள் ஒழிந்து நிம்மதியாக வாழவும் இந்த வழிபாடு உதவி புரியும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் கால பைரவரை நாளை இப்படி வழிபட்டு நல்ல பலனை அடையுங்கள்.

- Advertisement -