இன்றைய நவ நாகரீக உலகில் கூந்தலை பராமரிக்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஆசைக்கு அவர்கள் செய்யக்கூடிய முயற்சி ஒன்றே ஒன்றுதான். அதுதான் பியூட்டி பார்லர். அதை சரி செய்கிறேன், இதை சரி செய்கிறேன் என்று பியூட்டி பார்லருக்கு போய் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்கிறார்கள். இந்த செயலை சிறிது மாற்றிக் கொண்டு நமக்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய மூலிகைகளை பயன்படுத்தியே நம்முடைய கூந்தலை பராமரிக்க முடியும் என்பதை பலரும் உணர்ந்தாலும் நேரமின்மை என்ற ஒரு வார்த்தையை பயன்படுத்தி எதையும் அவர்கள் செய்வதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஒரே ஒரு தேங்காயை வைத்து கூந்தலை பட்டு போல பராமரிக்கும் முறையைப் பற்றிதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
பட்டு போன்ற அழகிய கூந்தலை பெறுவதற்கு ஒரு முழு தேங்காயை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காயை நன்றாக கீரி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு வெதுவெதுப்பான ஒரு கிளாஸ் தண்ணீரை அதில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த விழுதில் இருந்து தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் பாலை ஒரு காற்று புகாத டப்பாவில் ஊற்றி மூடி ஃப்ரீசரில் அரை மணி நேரம் வைக்க வேண்டும்.
அரை மணி நேரம் கழித்து இந்த டப்பாவை எடுத்து திறக்கும் பொழுது மேலே வெண்ணெய் போன்ற ஒரு அமைப்பு ஏற்பட்டிருக்கும். அதை மட்டும் தனியாக எடுத்து ஒரு பவுலில் வைத்து விடலாம். ஃப்ரீசரில் வைக்க விருப்பம் இல்லாதவர்கள் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரம் சாதாரண ஃப்ரிட்ஜில் வைக்கலாம். ஃப்ரிட்ஜே வேண்டாம் என்று நினைப்பவர்கள் இரவு இந்த தேங்காய் பாலை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு விட்டு காலை எழுந்த பிறகு பார்க்கும்பொழுது மேலே அந்த தேங்காய் கிரீம் கிடைக்கும். இப்படியும் உபயோகப்படுத்தலாம்.
இப்பொழுது அந்த தேங்காய் கிரீமை தனியாக எடுத்து ஒரு பவுலில் வைத்து உங்களால் முடிந்த அளவிற்கு அதை கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக கலக்க வேண்டும். வேறு எதுவும் சேர்க்க வேண்டாம். இதை அப்படியே உங்கள் தலைமுடியில் ஒவ்வொரு பாகமாக எடுத்து தடவ வேண்டும். அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு தலைக்கு குளித்து விடவேண்டும்.
அவ்வளவுதான் இப்படி நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை செய்வதன் மூலம் உங்கள் தலைமுடியில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் நீங்கி உங்கள் முடி பட்டு போன்று மென்மையாகவும் அதே சமயம் அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே: வல்லாரைக் கீரை அழகு குறிப்பு
அனைவரின் இல்லங்களிலும் கிடைக்கக்கூடிய தேங்காயை வைத்து நாமே சுத்தமான முறையில் தேங்காய் கிரீமை எடுத்து பயன்படுத்துவதன் மூலம் தேங்காயில் இருக்கக்கூடிய அனைத்து விதமான அற்புதமான சத்துக்களும் நம் கூந்தலுக்கு கிடைத்து கூந்தல் ஆரோக்கியமாக திகழும்.