- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilபட்டுப் போன்ற கூந்தலை பெற பயன்படுத்த வேண்டிய ஹேர் மாஸ்க்

பட்டுப் போன்ற கூந்தலை பெற பயன்படுத்த வேண்டிய ஹேர் மாஸ்க்

- Advertisement -

தலை முடி பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அதிலும் கூந்தலை மிருதுவாகவும் பட்டுப்போலவும் நட்சத்திர நடிகைகள் போல் மினுமினுப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் இன்றைய தலைமுறையினர் ஆசைப்படுகிறார்கள். இதற்காக பியூட்டி பார்லர் செல்ல வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வீட்டில் இருக்கக் கூடிய இரண்டை இரண்டு பொருட்களை வைத்து ஹேர் மார்க்ஸ் போட்டு தலைக்கு குளித்தாலே போதும். ஒரு முறை குளித்தாலே பட்டு போன்ற மிதுவான கூந்தலை நம்மால் பெற முடியும். அந்த ஹேர் மாஸ்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

ஒவ்வொருவருடைய தலைமுடியும் ஒவ்வொரு வகையாக இருக்கும். எப்படி சருமத்தின் வகைகள் இருக்கிறதோ? அதேபோல் தலைமுடியின் வகைகளும் இருக்கிறது. எப்படிப்பட்ட வகையான தலைமுறையாக இருந்தாலும் அதை மிருதுவாக பட்டுப்போல மாற்றுவதற்கு நாம் இந்த இரண்டு பொருட்களை மட்டும் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் போட்டால் போதும். வாரத்திற்கு ஒருமுறை என்ற வீதம் நாம் தொடர்ந்து இதை பயன்படுத்தும் பொழுது நம் தலை முடி மிருதுவாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் மாறும்.

- Advertisement -

இந்த ஹேர் மாஸ்கை தயார் செய்வதற்கு உபயோகப்படுத்தக்கூடிய அந்த இரண்டு பொருட்கள் தான் முட்டை மற்றும் தயிர். பொதுவாக முட்டையை நாம் நம்முடைய தலைமுடிக்கு பயன்படுத்தும் பொழுது அது தலைமுடியை வலுவாக்குகிறது. மேலும் முடி உதிர்தல் பிரச்சினையை நீக்குகிறது. பொடுகு பிரச்சனை எதுவும் வராமல் தடுக்கிறது. இவ்வளவு பல அற்புதம் நிறைந்த இந்த முட்டையோடு நாம் தயிரையும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது தயிரின் இயற்கையான குணமானது நம்முடைய முடியை பட்டு போல மிருதுவாக மாற்றுகிறது.

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு முட்டையை மஞ்சள் கருடன் சேர்த்து ஊற்றி விடுங்கள். பிறகு அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு தயிரை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இவை இரண்டும் நன்றாக கலந்த பிறகு அப்படியே எடுத்து நம்முடைய தலைமுடியின் வேர் கால்களில் இருந்து தலைமுடியின் நுனி வரை தடவ வேண்டும். இவ்வாறு தடவிய பிறகு அரைமணி நேரம் அப்படியே விட்டுவிட்டு ஷாம்புவை பயன்படுத்தி தலைக்கு குளித்து வரவேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் நம் தலையில் இருக்கக்கூடிய பொடுகு பிரச்சனை நீங்கும். முடி உதிர்தல் பிரச்சனை சரியாகும். முடி வலுவாகவும், அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும். அதே சமயம் மிருதுவாக பட்டுப்போலவும் காட்சி தரும்.

இதையும் படிக்கலாமே: நரை பிரச்சினை தீர உதவும் ஹேர் மாஸ்க்

பல அற்புத சத்துக்கள் நிறைந்த முட்டையும் தயிரையும் இந்த முறையில் நாம் பயன்படுத்தி நம்முடைய முடியின் ஆரோக்கியத்தை பேணி காப்போம்.

சற்று முன்