- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநவகிரகத்தால் வரும் பாதிப்புகள் நீங்க நவதானிய பரிகாரம்

நவகிரகத்தால் வரும் பாதிப்புகள் நீங்க நவதானிய பரிகாரம்

- Advertisement -

தினம் தினம் ஒவ்வொரு கஷ்டம், தினுசு தினுசா, புதுசு புதுசாக வருது. எந்த ரூபத்தில், எந்த பக்கத்தில் இருந்து, எந்த பிரச்சனை வரும் என்று தெரியாமல் சில குடும்பங்கள் தவித்து வரும். நேற்றுதான் அம்மா அப்பாவுக்கு உடல்நிலை சரியானது. இன்று பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. நேற்று தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்தேன்.

இன்று மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. நேற்று தான் அந்த பழைய சண்டை ஓய்ந்தது. இன்று மீண்டும் புதிய சண்டை தொடங்கியது. மனதில் சுத்தமாக நிம்மதியே இல்லை என்பவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள். நவகிரகங்களும் வந்து உங்களுக்கு நன்மையை மட்டுமே செய்யும்.

- Advertisement -

குடும்பத்தில் நல்லது நடக்க பரிகாரம்

குடும்பத்தில் நல்லது நடக்க இந்த ஒரு பொருளை வாங்கி வந்து பூஜையறையில் வைக்கணும். அது என்ன பொருள் தெரியுமா? நவதானியம். இன்று சனிக்கிழமை மனதார குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொண்டு இதை செய்யுங்கள். நவதானியங்களும் ஒன்று சேர்ந்த பாக்கெட் கடைகளில் விற்கும். அதிலிருந்து ஒரு பாக்கெட் மட்டும் வாங்கிக்கோங்க.

பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்து, இந்த நவதானியத்தை ஒரு சின்ன கிண்ணத்தில் கொட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். மனம் உருகி நவகிரகங்களையும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். ஜாதக கட்டத்தில் கிரக சூழ்நிலை சரியில்லை என்றாலும் எங்களுடைய குடும்பத்திற்கு பிரச்சினை வரக்கூடாது என்று வேண்டுதல் வைக்கவும். இன்று தொடங்கி அடுத்த ஏழு நாட்கள் இந்த நவதானியம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்த சனிக்கிழமை இந்த நவதானியங்களை எடுத்து ஊறவைத்து அரைத்து தோசை சுட்டு வீட்டில் இருப்பவர்களை சாப்பிட்டு கொள்ளலாம். எந்த தவறும் கிடையாது. அப்படி நீங்கள் இதை பயன்படுத்தவில்லை என்றால், நன்றாக தண்ணீரில் ஊற வைத்து பசு மாட்டிற்கு சாப்பிட கொடுக்கலாம். இப்படி வாரம் ஒரு முறை புதுசாக நவதானியம் வாங்கி பூஜையறையில் வைத்து நவகிரகங்களை வழிபாடு செய்துவர, உங்கள் குடும்பத்திற்கு பெரிய அளவில் சங்கடங்கள் எதுவும் வராமல் இருக்கும்.

இந்த பரிகாரத்தை இன்று தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. எந்தக் கிழமையில் வேண்டுமென்றாலும் செய்யலாம். அன்றிலிருந்து ஒரு வாரம் கணக்கு வச்சுக்கோங்க. ஒரு வாரத்துக்கு ஒருமுறை இந்த நவதானியத்தை புதுசா மாத்தணும். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தீரும் வரை இந்த பரிகாரத்தை செய்யணும். இது ஒரு எளிமையான பரிகாரம் தான். நம்பிக்கை உள்ளவர்கள் தீராத கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், கெட்ட நேரத்தில் சிக்கி தவிப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -

இதோடு சேர்த்து எளிமையான இன்னொரு பரிகாரமும் இருக்கிறது. உங்கள் கஷ்டங்கள் கரைந்து போக வேண்டும் என்றால் தினமும் உங்கள் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். விளக்கு ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ எரிந்து முடிந்த பிறகு அந்த விளக்கை பூர்த்தி செய்வோம் அல்லவா. விளக்கை குளிர வைப்பது என்று சொல்லுவார்கள்.

இதையும் படிக்கலாமே: பிப்ரவரி மாத மூன்றாம் பிறை தரிசனம்

ஒரு கட்டி கற்கண்டு வாங்கி வச்சுக்கோங்க, அந்த கற்கண்டை வைத்து அந்த தீப சுடரை மலையேற்றுங்கள். அந்த கற்கண்டை, தீபச்சுடரில் லேசாக வைத்தால் தீபம் குளிர்ந்து விடும். இப்படி செய்தால் அந்த கட்டி கல்கண்டு, அந்த நெருப்பில் பட்டு, தினம் தினம் எப்படி கரைகிறதோ, அதேபோல உங்கள் கஷ்டங்களும் கரையும் என்ற ஒரு நம்பிக்கையும் ஆன்மீகத்தில் இருக்கிறது. இந்த இரண்டு எளிமையான பரிகாரங்களும் மிகப்பெரிய அளவில் குடும்பத்திற்கு நன்மையை தரக்கூடியவை. தேவைப்படுபவர்கள் வாய்ப்பு உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்