- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சனைகளை நீக்கும் மாதங்கி வழிபாடு

பிரச்சனைகளை நீக்கும் மாதங்கி வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் எந்த வகையில் பிரச்சனை ஏற்படும்? பணரீதியான பிரச்சனை என்றால் மகாலட்சுமியை வழிபட வேண்டும். படிப்பு ரீதியான பிரச்சனை என்றால் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். எதிரிகளால் பிரச்சனை, வாழ்வதற்கே பயம் என்று இருப்பவர்கள் சக்தி தேவியை வழிபட வேண்டும். இந்த மூன்று தேவிகளும் ஒருசேர உருவெடுத்த தேவியாக தான் மாதங்கி அம்மன் விளக்குகிறார். அப்படி இருக்கும் பொழுது மாதங்கி அம்மனை நாம் வழிபட்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் மாதங்கி அம்மனை வீட்டில் எந்த முறையில் வழிபட்டால் நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

குடும்பத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் நம் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு நமக்கு தேவைப்படுகின்ற எதுவாக இருந்தாலும் அதை வாரி வழங்கக் கூடிய ஆற்றல் மிக்க தெய்வமாக திகழ்பவள்தான் ராஜ மாதங்கி. இந்த ராஜ மாதங்கி அம்மனை மிகவும் எளிமையான முறையில் நம்மால் வழிபட முடியும். இதற்காக நாம் பெரிதும் சிரமப்பட வேண்டிய வேண்டியது இல்லை.

- Advertisement -

வளர்பிறை சுபமுகூர்த்த வெள்ளிக்கிழமை நாளாக பார்த்து ஒரு நாளை தேர்வு செய்து கொள்ளுங்கள். யார் பூஜை செய்ய இருக்கிறார்களோ அவர்களுக்கு அன்றைய தினம் சந்திராஷ்டமம் இருக்கக் கூடாது. வீட்டு பூஜை அறையை முதல் நாளே சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலையிலோ மாலையிலோ எந்த நேரம் உங்களுக்கு வசதியாக இருக்குமோ அந்த நேரத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு புதிதாக வாங்கிய அகல் விளக்கு ஒன்று தேவைப்படும். அந்த அகல் விளக்கை வைத்து ஏற்றுவதற்கு ஒரு தாம்பாளம் ஒன்று தேவைப்படும். அடுத்ததாக வாசனை மிகுந்த தாழம்பூ குங்குமம் வேண்டும். இதோடு ஜவ்வாது பொடியும் வேண்டும். இப்பொழுது வெள்ளிக்கிழமை அன்று காலையில் புதிதாக வாங்கிய இந்த அகல் விளக்கை சுற்றி மஞ்சளை தடவி குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

விளக்கை வைத்து ஏற்றும் தாம்பாளத்திற்கும் மஞ்சள் குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அந்த தாம்பாளத்தின் மேல் சிறிது அச்சதை அரிசிகளை போட்டு அதற்கு மேல் இந்த விளக்கை வைத்து சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணையில் தீபம் ஏற்ற வேண்டும். இந்த விளக்கை தான் நாம் மாதங்கி அம்மனாக பாவிக்க வேண்டும். இந்த விளக்கை சுற்றி வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

மற்றொரு தாம்பாளத்தை எடுத்து அதில் நாம் வாங்கி வைத்திருக்கும் தாழம்பூ குங்குமத்தை போட்டு அதனுடன் ஜவ்வாது பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த குங்குமத்தை வைத்து அந்த விளக்கை அம்மனாக பாவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி செய்யும் பொழுது “ஓம் ஹ்ரீம் க்லீம் ஹீம் மாதங்க்யை பட் ஸ்வாஹா” என்னும் மந்திரத்தை கூற வேண்டும்.

- Advertisement -

இப்படி தொடர்ந்து 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை தினமும் தொடர்ந்து 48 நாட்கள் நாம் செய்தால் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். நம்முடைய வாழ்க்கை முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க ஆரம்பிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தொடர்ந்து 48 நாட்கள் செய்ய இயலாதவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

மாதங்கி அம்மனை மனதார நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு வேலை தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். எதிரிகளின் தொல்லை அகலும். படிப்பு ரீதியாக ஏற்பட்ட தடைகள் அனைத்தும் தகர்த்தெறியப்பட்டு சிறப்பான கல்வியைப் பெற முடியும். மனபயம் நீங்கும். இப்படி நாம் பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர விளக்கு ஏற்றும் முறை

முழு நம்பிக்கையுடன் மாதங்கி தேவியை சரணடைந்து யார் ஒருவர் இந்த வழிபாட்டை செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் கண்டிப்பான முறையில் முன்னேற்றம் என்பது இருக்கும்.

சற்று முன்