மனிதனாகப் பிறந்த அனைவருமே வேலை செய்து தான் சம்பாதிக்க வேண்டும். நம்முடைய வாழ்வாதாரத்திற்கு அடிப்படையே வேலையும் வருமானம் தான். இதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் எத்தனை பேருக்கு தங்களுக்கு பிடித்த வேலை கிடைத்து மனநிறைவாக இருக்கிறார்கள். இந்த கேள்வி கேட்டால் நிச்சயம் பதில் மௌனமாக தான் இருக்கும்.
ஏதோ ஒரு சிலருக்கு தான் அதிர்ஷ்டவசமாக படித்த படிப்புக்கேற்ற வேலையும், அவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலையும் கிடைக்கும். பெரும்பாலானோர் வாழ்க்கையை நகர்த்த ஏதோ ஒரு வேலை செய்ய வேண்டும் என்று தான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனாலும் உள்ளுக்குள் தங்களுக்கு பிடித்த வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே தான் இருக்கும்.
அப்படியானவர்கள் ஏழு நாட்கள் மட்டும் சூரிய பகவானை நினைத்து இந்த பரிகாரம் செய்தால் போதும். நிச்சயம் விரும்பிய வேலை விரும்பிய இடத்தில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
விரும்பிய வேலை கிடைக்க பரிகாரம்
நமக்கு வேலை தொடர்பான அனைத்து காரியங்களுக்கும் வழிபட வேண்டிய தெய்வம் சூரிய பகவான். ஏனெனில் சூரிய பகவான் தான் கிரகங்களில் வேலைக்கான அரசன், வேலைக்கான காரணத்துவன் என்றெல்லாம் சொல்லப்படுகிறார். சூரிய பகவானை வணங்கும் போது தான் நமக்கு வேலைக்கான தடைகள் நீங்கி அனைத்தும் சாதகமாக நடக்கும்.
அப்படியான சூரிய பகவானை ஏழு நாட்கள் இந்த முறையில் நாம் வணங்க வேண்டும். இதற்கு காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து முதலில் குளித்து விட வேண்டும். அதன் பிறகு வெள்ளை நிறத்திலான ஆடை அணிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு சிவப்பு மிளகாயின் விதைகள் 21 என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மிளகாய் விதையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு சூரிய பகவான் தெரியும் இடத்தில் நீங்கள் நிற்க வேண்டும். அது மொட்டை மாடியாக இருக்கலாம் அல்லது உங்கள் வீட்டு வாயிற்ப்படியாக இருக்கலாம். அது உங்கள் இருப்பிடத்திற்கு ஏற்றபடி தேர்வு செய்து கொள்ளுங்கள். மிளகாய் விதைகளை வலது கையில் வைத்து இடது கை கொண்டு மூடி விடுங்கள். இப்போது சூரிய பகவானின் 12 பெயர்களை சொல்லி வணங்க வேண்டும்.
சூரிய பகவானின் பெயர்கள்
ஆதித்யா நமஹ
திவாகராய நமக
பாஸ்கராய நமக
பிரபாகராய நமஹ
சகஸ்ர தர்ஷிகா நமஹ
த்ரிலோசனாய நமஹ
ஹரிதாசவே நமஹ
விபா வஸௌ நமஹ
தின கீர்தே நமஹ
துவாத ஷேத்மகாய நமஹ
தெரிகி மூர்த்தியே நமஹ
சூர்யா ஐய நமஹ
இந்த 12 பெயர்களையும் சொல்லி சூரிய பகவானை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அப்போது உங்களுக்கு என்ன வேலை எங்கு வேண்டும் என்பதை எல்லாம் அவரிடம் வேண்டுதலாக வைக்க வேண்டும். அதன் பிறகு கையில் இருக்கும் மிளகாய் விதையை அவருக்கு சமர்ப்பணம் செய்வது போல் அப்படியே மேலிருந்து கீழ் விழுமாறு போட வேண்டும். இதே போன்று ஏழு நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே: குடும்பம் சுபிட்சமாக இருக்க வழிபாடு
அத்துடன் உங்கள் வேலையோ அல்லது வேலை இடமாற்றத்திற்கான முயற்சியும் நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். நிச்சயம் இத்தனை நாட்கள் நடக்காத அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நடந்து விரும்பிய வேலை விரும்பி இடத்தில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.