- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்செவ்வாழை குழிப்பணியாரம் செய்முறை

செவ்வாழை குழிப்பணியாரம் செய்முறை

- Advertisement -

நம்முடைய பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று தான் ஒவ்வொரு தாய்மார்களும் நினைப்பார்கள். அவர்கள் ஆரோக்கியமாக வளர்வதற்கு அவர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதற்கும் பழங்களை வாங்கி தரும் தாய்மார்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி பழங்களை வாங்கி கொடுத்தாலும் அதை விரும்பி உண்ணாமல் தட்டிக் கழிக்கும் குழந்தைகளை அதிகமாக உள்ளனர். அந்த வகையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய செவ்வாழையை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுலபமான முறையில் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

வாழைப்பழங்களில் மிகவும் சிறந்த பழமாக திகழ்வது செவ்வாழை. இதில் அதிக அளவு விட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என பல சத்துக்கள் இருக்கின்றன. தினமும் செவ்வாழையை சாப்பிடுவதன் மூலம் மாலைக்கண் நோய், மலட்டுத்தன்மை நீங்குகிறது. மூளை செயல்பாடும், இதய செயல்பாடும் சீராகிறது. கல்லீரல், எலும்புகள், குடல் இயக்கம் போன்றவை வலுக்கின்றன. மேலும் சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்க உதவுகிறது. ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த செவ்வாழையை வைத்து குழி பணியாரம் செய்வதை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • செவ்வாழைப்பழம் – 2
  • கோதுமை மாவு – 2 கப்
  • தேங்காய் துருவல் -1/2 கப்
  • பொடித்த வெல்லம் – 1 கப்
  • ஏலக்காய் – 4
  • உப்பு – 1 சிட்டிகை
  • நெய் அல்லது எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் கனிந்த செவ்வாழைப்பழங்களாக பார்த்து எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு பொடி பொடியாக நறுக்க வேண்டும். இந்த வாழைப்பழத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய், ஏலக்காய் இவற்றை சேர்த்து நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். அரைத்த இந்த விழுதை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் கோதுமை மாவு மற்றும் உப்பு இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பொடித்து வைத்திருக்கும் வெல்லத்தை சேர்த்து அதனுடன் கால் கப் அளவு தண்ணீரை ஊற்றி வெல்லம் கரையும் வரை அப்படியே வைத்து விட வேண்டும். வெல்லம் அனைத்தும் நன்றாக கரைந்த பிறகு ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வெல்ல கரிசலை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கலந்து வைத்திருக்கும் மாவில் சிறிது சிறிதாக வெல்ல கரைசலை ஊற்றி நன்றாக மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். கரைத்த இந்த மாவில் ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய்யை சேர்த்துக் கொள்ள வேண்டும். விருப்பம் இருப்பவர்கள் சிறு சிறு துண்டுகளாக முந்திரி பருப்பை நெய்யில் வறுத்தும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது அடுப்பில் பணியார கல்லை வைத்து கல் காய்ந்ததும் அதில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி பிறகு நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை அதில் ஊற்றி குறைந்த தீயில் வைத்து வேக வைக்க வேண்டும். ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு மறுபடியும் அதை திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக வைத்து எடுக்க வேண்டும். மிகவும் சுவையான அதே சமயம் ஆரோக்கியமான எளிதில் செய்து தரக்கூடிய ஒரு செவ்வாழை குழிப்பணியாரம் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: ரமலான் நோன்பு கஞ்சி செய்முறை

உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ளும் அனைவரும் தங்களுடைய அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் வாழைப்பழத்தை கண்டிப்பாக சேர்த்துக் கொள்வார்கள் என்பதை கருத்தில் வைத்துக் கொள்ள வேணடும்.

சற்று முன்