- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணப் பிரச்சனை தீர துர்க்கை அம்மன் வழிபாடு

பணப் பிரச்சனை தீர துர்க்கை அம்மன் வழிபாடு

- Advertisement -

துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது என்பது தாயிடம் ஒரு பிள்ளை சென்று வரம் கேட்பதற்கு சமம் என்று சொல்வார்கள். ஏனெனில் எந்த ஒரு பிள்ளையும் தன் தாயிடம் சென்று எதை கேட்டாலும் தாய் மறுக்காமல் அதை தருவாள். அப்படித் தான் துர்க்கை அம்மனும் நாம் அவரிடம் சென்று எதை கேட்டாலும் அதை மறுக்காமல் நமக்குத் தருவார்.

அத்தகைய தாய் உள்ளம் கொண்ட துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறந்தது. அப்படியான வழிபாட்டை பலரும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய பிரச்சனைகள் பண தேவைகள் அனைத்தும் தீர ராகு கால நேரத்தில் சில முறைகளில் வழிபட்டால் உடனே தீரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப்பற்றியதொரு தகவலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணப் பிரச்சனை காரியத்தடை நீங்க பரிகாரம்

இந்த பரிகாரத்தையும் நீங்கள் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் ஆலயத்தில் சென்று தான் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்க்கு ஐந்து எலுமிச்சை பழம் புள்ளி இல்லாத நல்ல பழங்களாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல 9 கிராம்பு இந்த கிராம்பும் உடையாத நிலையில் இருக்க வேண்டும். அடுத்து சிகப்பு நிற திரி நல்லெண்ணெய்.

இவைகளை நீங்கள் செவ்வாய்க்கிழமை தீபம் ஏற்ற போகும் போது தான் வாங்க வேண்டும். முதல் நாலே வாங்கி வீட்டில் வைக்கக் கூடாது அதே போல் வீட்டில் இருக்கும் பொருட்களையும் எடுத்துக் கொண்டு சென்று ஏற்றக் கூடாது. இந்தப் பொருட்களை ஆலயத்திற்கு கொண்டு சென்று துர்க்கை அம்மனுக்கு முன்பாக தான் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

முதலில் ஐந்து எலுமிச்சை பழத்தையும் இரண்டாக நறுக்கி அதில் உள்ள சாறை பிழிந்து விடுங்கள். நாம் 9 தீபம் தான் ஏற்ற வேண்டும் அதற்கு ஏற்றார் போல் எலுமிச்சை பழத்தை தயார் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பழத்திலும் ஒரு கிராம்பை போட்டு விடுங்கள் அதில் சிகப்பு நிற திரியை சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி எலுமிச்சை தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபங்கள் அனைத்தும் அன்னையைப் பார்த்தவாறு எறிய வேண்டும்.

இந்த பழங்களை நீங்கள் பிழிய ஆரம்பிப்பது முதல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் வரை உங்கள் மனதில் வேறு எந்த சிந்தனைகளும் வரக் கூடாது. உங்களுக்கு என்ன தேவையோ குறிப்பாக பணத்தேவை இந்த வழிபாட்டின் மூலம் சரியாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படி இல்லாமல், தீபம் ஏற்றும் பொழுது நீங்கள் வேறு எதையாவது யோசித்துக் கொண்டோ, பேசிக் கொண்டோ செய்தால் கட்டாயமாக பலன் கிடைக்காது.

- Advertisement -

இந்த தீப வழிபாடு ஆனது உங்களுக்கு ஏதேனும் பண தேவை இருக்கிறது. யாரிடமாவது நீங்கள் கேட்க வேண்டும் எனில் இந்த தீப வழிபாட்டை செய்த பிறகு கேட்டால் நிச்சயம் அது கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி நீங்கள் ஏதேனும் ஒரு காரியத்திற்காக வெளியில் செல்கிறீர்கள் அந்த காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றாலும் இந்த தீப பரிகாரத்தை செய்த பிறகு செல்லலாம் நிச்சயம் நல்ல முடிவு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தடையில்லா பண வரவு பெற அமாவாசை வழிபாடு

அம்மனை நாம் வழிபாடு செய்தாலே நம்முடைய வாழ்க்கை சிறப்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சில முறைகளில் பரிகாரங்கள் செய்யும் பொழுது அதற்கான பலன் உடனே கிடைக்கும் அப்படியான ஒரு பரிகார முறை தான் இந்த தீபம். இதை செய்த பிறகு உங்களுடைய முயற்சியை தொடருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்