- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணத்தடை நீங்க சனிக்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

பணத்தடை நீங்க சனிக்கிழமையில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

- Advertisement -

ஒருவர் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமெனில் அவர் எடுக்கும் காரியத்தில் முதலில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் அடுத்தடுத்து அவர் முன்னேற முடியும். அதன் மூலம் பணவரவு அதிகரித்து அவர்கள் வாழ்க்கை நல்ல முறையில் அமையும். ஆனால் ஒரு சிலருக்கு எதை தொடங்கினாலும் அது முட்டுக்கட்டையாகவே நிற்கும்.

இதோ முடிந்து விடும் என நினைக்கும் தருவாயில் அந்த வேலை அப்படியே நின்று விடும். இது வேலைக்கு மட்டுமல்ல வருமானத்திற்கும் பொருந்தும். ஏனெனில் வேலை சரியான முறையில் முடிந்தால் தானே வருமான வரும். இன்னும் சில இடங்களில் வேலை முடிந்த பிறகும் வருமானம் கைக்கு வராது வந்தாலும் தாங்காது.

- Advertisement -

இப்படியான சூழ்நிலைகள் மாற சனிக்கிழமைகளில் சில பரிகாரங்கள் செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பணத்தடை காரியத்தை நீங்க சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

சனிக்கிழமையில் காகத்துக்கு உணவளிப்பது மிகவும் சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. காகத்திற்கு அமாவாசை தினத்தன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நாம் ஏதேனும் உணவு அளிப்பது சிறந்தது. அதிலும் சனிக்கிழமை இதை செய்யும் போது நம் சனி தோஷம் கிரக தோஷம் அனைத்தும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதே போல் மற்ற பறவைகளுக்கு தண்ணீரும் தானியமும் வழங்குவது நம்முடைய கர்மாவை பெருமளவு குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய இன்றைய அனைத்து பிரச்சனைகளுக்கும் நம் கர்ம வினை தான் காரணம் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் இந்த தானமானது நம்முடைய கர்ம வினையை தீர்க்க பெரிதும் உதவி புரியும்.

சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு ஆலயத்திற்கு நல்லெண்ணையை தானம் செய்வது சிறந்தது. இதன் மூலம் தொழில் முடக்கம் இருந்தால் அது சரியாகும். வருமானத் தடை நீங்கும் எடுத்த காரியங்களில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். அது மட்டும் இன்றி கிரக தோஷம் சனி தோஷம் போன்றவை அனைத்தும் நீங்கும்.

- Advertisement -

அதே போல் சனிக்கிழமைகளில் வஸ்திர தானம் செய்வது மிகவும் சிறந்தது. சாலை ஓரத்தில் இருப்பவர்கள் வயதானவர்களுக்கு போர்வைகள் ஆடைகள் போன்றவற்றை தானமாக கொடுப்பது நம் குடும்பத்தில் இருக்கும் தீராத பிரச்சனைகள், தொழில் வளர்ச்சி தடை, கடன் பிரச்சனை போன்ற சகலமும் நிவர்த்தியாகும்.

சனிக்கிழமைகளில் முழு முதல் கடவுளான விநாயகரை தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்வது நம்முடைய தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விடும். இத்துடன் சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் சனியும் தோஷத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பயம் என அனைத்தும் நீங்கும். ஆகையால் ஆஞ்சநேயர் வழிபாடை வாரந்தோறும் செய்வது நல்ல பலனை தரும்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி பணத்தடை நீங்க பரிகாரம்

இந்த பரிகாரங்கள் அனைத்தும் அனைவரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் செய்யலாம். ஏனெனில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு விதமான காரணங்கள் இருக்கலாம். இந்த பரிகாரங்கள் எல்லாமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் . இவற்றில் உங்களால் முடிந்த ஏதேனும் ஒன்றை செய்து கொண்டே இருங்கள் . நிச்சயம் நல்ல பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

சற்று முன்