ஒரு வீட்டிற்கு நன்மையோ தீமையோ அந்த வீட்டின் நிலை வாசலின் வழியாகத்தான் வரும். அப்படி நிலை வாசலின் வழியாக வரும்பொழுது நன்மைகள் மட்டுமே உள்ளே வரவேண்டும், எந்த வித தீய சக்திகளும் வரக்கூடாது என்பதற்காக சில பரிகாரங்களை நாம் செய்வோம். அந்த வகையில் இன்றைய ஆன்மீகம் குறித்த பதிவில் மகாலட்சுமி தாயார் நம் வீட்டிற்கு வரவும் நம் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக இருக்கவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
செல்வ செழிப்புடன் வாழ வேண்டும், எந்தவித எதிர்மறை சக்திகளும் வீட்டிற்குள் வரக்கூடாது, தெய்வ சக்தி வீட்டில் குடியேற வேண்டும், பணவரவு அதிகரிக்க வேண்டும், குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பல ஆசைகள் நம்முள்ளே இருக்கும். இவை அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு நமக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு செய்யக்கூடிய ஒரு நிலை வாசல் பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்தால் போதும். முடிந்த அளவிற்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். அதுவும் வளர்பிறை வெள்ளிக்கிழமையாக இருந்தால் மிகவும் சிறப்பு. இதற்கு நமக்கு ஒரு சிவப்பு நிற துணி வேண்டும். சிவப்பு நிற துணி என்பது மங்கள காரகனான செவ்வாய் பகவானுக்குரிய நிறம், மேலும் இந்த சிவப்பு நிறமானது செல்வத்தை ஈர்க்கும் தன்மை உடையதாக கருதப்படுகிறது.
இந்த சிவப்பு நிற துணியில் முட்டு உடையாத ஐந்து கிராம்பை வைக்க வேண்டும். ஐந்து என்ற எண்ணிக்கை குபேரருக்கு உரிய எண்ணிக்கையாக திகழ்கிறது. அடுத்ததாக இதில் மூன்று பட்டை வைத்து இரண்டு துண்டு பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். இந்த கிராம்பு, பட்டை, பச்சை கற்பூரம் இவை மூன்றும் நறுமணம் மிகுந்த பொருட்களாக திகழ்கிறது. இந்த நறுமணம் வீசும் இடத்தில் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இப்பொழுது இதை ஒரு மூட்டையாக பச்சை நிற நூலால் கட்ட வேண்டும். மறுபடியும் பச்சை நிறம் என்பது குபேரனுக்குரிய அம்சமாக கருதப்படுகிறது. பச்சை நிற நூல் கிடைக்காதவர்கள் மஞ்சள் நிற நூலை பயன்படுத்தலாம். இது குரு பகவானுக்குரிய நூலாக திகழும். இப்படி இதை மூட்டையாக கட்டிவிட்டு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் நம்முடைய வீட்டின் நிலை வாசலுக்கு வெளிப்புறமாக கட்ட வேண்டும். தினமும் வீட்டில் பூஜை செய்யும் பொழுது ஊதுபத்தி, சாம்பிராணி காட்டுவோம் அல்லவா? அப்பொழுது இந்த மூட்டியை மகாலட்சுமியாக பாவித்து ஊதுபத்தி சாம்பிராணி காட்ட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கோரிக்கை நிறைவேற அரச இலை வழிபாடு
பல பணக்காரர்களின் சூட்சுமமான ரகசியமான இதை நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும்.