- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் சம்பாதிக்கும் தகுதி பெற வழிபாடு

பணம் சம்பாதிக்கும் தகுதி பெற வழிபாடு

- Advertisement -

பணத்தை சம்பாதித்து, சேமிக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அந்த பணத்தை சம்பாதிக்க கூடிய தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வருவது கிடையாது. சும்மாவே பணம் வேண்டும், பணம் வேண்டும், என்று கேட்டால், பணம் வந்து விடுமா? பணத்தை எப்படி சம்பாதிப்பது?

அதற்கு உண்டான தகுதியை நாம் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இப்படிப்பட்ட நேர்மறையான சிந்தனைகள் உங்களுக்குள் எழ வேண்டும் என்றால், செய்ய வேண்டிய ஒரு விநாயகர் வழிபாட்டை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பண வரவை அதிகரிக்கும் விநாயகர் வழிபாடு

இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான விநாயகர் வெல்லத்தால் செய்யப்பட்ட விநாயகர், அல்லது சர்க்கரையால் செய்யப்பட்ட விநாயகர். இப்போது கோன் வடிவிலேயே வெல்லம் விற்கின்றது. அதை வாங்கி இந்த வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம். இல்லை என்றால் கட்டி வெல்லத்தை தூள் செய்து மஞ்சள் பிள்ளையார் போலவே, வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து, இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

தினமும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு வெற்றிலையின் மீது வெல்லத்தால் செய்யப்பட்ட பிள்ளையாரை வைத்து, உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் தீர வேண்டும், பண வரவு அதிகரிக்க வேண்டும், பணத்தை சம்பாதிக்கக் கூடிய தகுதி எனக்குள் வளர வேண்டும் என்ற பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்துவரும் பட்சத்தில் உங்களுடைய வருமானம் பெருக தொடங்கிவிடும். அதேபோல வந்த வருமானம் வீண் விரயம் ஆகாமல் நிலையாக சேமிப்பில் தங்கும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த வெல்லத்தால் பிடிக்கப்பட்ட பிள்ளையாரை வழிபாடு செய்யும்போது, உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழத் தொடங்கும்.

தினமும் அந்த வெல்லத்தை எறும்புகளுக்கு உணவாக மரம் செடி கொடிகளுக்கு அடியில் போட்டு விட வேண்டும். இதோடு சேர்த்து இன்னொரு ஒரு பொருளையும் உங்களுடைய வீட்டிற்குள் வைத்தால் பணம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அது என்ன பொருள் என்பதையும் இப்போது பார்த்துவிடலாம். பித்தளையால் செய்யப்பட்ட சின்ன சிங்கம் பொம்மை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கம்பீரமாக வீரநடை போட்டு வரக்கூடிய சிங்கத்தின் பொம்மை பித்தளையில் இருக்க வேண்டும். இந்த பொம்மையை உங்களுடைய வீட்டின் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். அந்த சிங்கம் உங்கள் வீட்டிற்குள் வருவது போல வைக்க வேண்டும். இந்த பொம்மை இருக்கும் இடத்தில் வருமானம் பெருகும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: வளர்பிறை பஞ்சமியில் சொல்ல வேண்டிய வாராகி மந்திரம்

குறிப்பாக தொழில் செய்யும் இடத்தில் இந்த பொம்மையை நீங்கள் வைக்கலாம். நஷ்டம் அடைந்த தொழில் கூட இந்த பொம்மையை வைப்பதன் மூலம் லாபம் அடையும். வீட்டில் இந்த பொம்மையை வைத்தால் வீட்டில் இருக்கக்கூடிய வறுமையானது விரட்டி அடிக்கப்பட்டு செல்வ செழிப்பு வீட்டிற்குள் வரும் என்பதும் நம்பிக்கை. உங்களுக்கு இந்த பரிகாரம் தேவை என்றால் பின்பற்றி பலன் பெறுங்கள்.

சற்று முன்