- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவளர்பிறை பஞ்சமியில் சொல்ல வேண்டிய வாராகி மந்திரம்

வளர்பிறை பஞ்சமியில் சொல்ல வேண்டிய வாராகி மந்திரம்

- Advertisement -

குழந்தை உள்ளம் கொண்ட வாராகி தாயை வளர்பிறை பஞ்சமித்திதியில் மனதார நினைத்து வழிபாடு செய்தாலே போதும். நாம் நினைத்தது நினைத்தபடி அப்படியே நடக்கும். அந்த வகையில் இன்றைய தினம் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை வளர்பிறை பஞ்சமி திதியானது வந்திருக்கின்றது. உங்களுடைய வீட்டில் வாராகியின் திரு உருவப்படம் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஒரு வரி மந்திரத்தை வாராகித் தாயை நினைத்து சொல்லுங்கள்.

உங்களுடைய பிரச்சனைகள் பஞ்சு பஞ்சாக பறந்து போகும். இன்று இரவு 12:00 மணிக்குள் நீங்கள் உச்சரிக்க வேண்டிய அந்த ஒரு வரி மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வளர்பிறை பஞ்சமி வாராகி மந்திரம்

வாராகியின் அருளைப் பெற அவளின் சிலை, திருவுருவப்படம் இவைகளை வைத்து தான் வழிபட வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. சில பேர் வீட்டில் வாராகித்தாயை உருவ வழிபாடு செய்ய அனுமதி கொடுக்க மாட்டார்கள். காரணம் வாராகி வழிபாட்டுக்கு தூய்மை என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.

எல்லோர் வீட்டிலும் 100% எப்போதும் தூய்மை கடைபிடிக்கப்படுகிறது என்று அவ்வளவு உறுதியாக சொல்லிவிட முடியாது. தூய்மை என்றால் குளித்துவிட்டு சுத்தபத்தமாக தான் இருப்போம்‌. ஆனால் சில தீட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களை வீட்டில் தவிர்க்க முடியாது. வீட்டில் பெண்கள் மாதவிடாய் ஆவது, கணவன் மனைவி ஒன்றாக இருப்பது போன்ற இந்த விஷயங்கள் எல்லாம் வீட்டில் இயல்பாக நடக்க கூடியவை.

- Advertisement -

இந்த தீட்டு எல்லாம் நடந்தால், வீட்டை உடனடியாக சுத்தம் செய்ய முடியும் என்றால் வாராகி தாய்க்கு, நெய்வேதியம் வைத்து நாள் தவறாமல் பூஜை செய்ய முடியும் என்பவர்கள் மட்டும், வாராகித் தாயின் திருவுருவப்படம் சிலையை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். இதெல்லாம் எங்களால் முடியாது எங்களுடைய அன்றாட வாழ்க்கையில், தினசரி வேலைகளை செய்வது சிரமம் என்பவர்கள் வாராகிதாயை மனதார நினைத்து விளக்கு ஏற்றி, அவள் நாமத்தைச் சொல்லி உங்கள் கஷ்டத்தைச் சொல்லி வழிபாடு செய்தாலே உங்கள், குறைகளை அவள் தீர்த்து வைப்பாள்.

இன்றைய தினம் பஞ்சமி திதியில் பூஜை அறையில் விளக்கு ஏற்றவில்லை என்றாலும் சரி, இருந்த இடத்திலிருந்து வாராகி தாயை ஒரு முறை மனதில் நினைத்து ‘வஜ்ரகோஷம் ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி’ என்ற இந்த மந்திரத்தை சொல்லுங்கள். வஜ்ரகோஷம் என்பது வாராகித் தாயின் சிம்ம வாகனத்துடைய பெயர்.

- Advertisement -

இந்த ஒரு வரி மந்திரத்தை உங்களால் எத்தனை முறை உச்சரிக்க முடியுமோ உச்சரிக்கலாம். தவறு கிடையாது. உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய, உங்களை கலங்கடிக்க கூடிய கஷ்டத்தை மனதில் நினைத்துக் கொண்டு, அந்த கஷ்டம் தீர வேண்டும் என்ற பிரார்த்தனையை வைக்கவும். இதே போல எதிரி தொல்லையால் அவதிப்படுபவர்கள், கோர்ட்டு கேஸ் வழக்குகளில் சிக்கி இருப்பவர்கள் கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள், கணவன் மனைவிக்குள் தீராத பிரச்சனை இருப்பவர்கள் என்று எல்லோரும் இந்த மந்திரத்தை சொல்லலாம். பிரச்சனையில் இருந்து விடுபட நல்லதொரு தீர்வு சீக்கிரத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தீராத சிக்கலில் சிக்கிக் கொண்ட சமயத்தில் நீங்கள் ரொம்பவும் துவண்டு போய் விட்டீர்கள், ரொம்பவும் பயந்து விட்டீர்கள், அந்த இடத்தில் மனதில் துணிச்சல் வரவேண்டும் என்றாலும் ‘வஜ்ரகோஷம்’ என்ற வார்த்தையை மனதிற்குள்ளேயே உச்சரிக்கும் போது எதிர்பாராத துணிச்சல், சிங்கத்தின் பலம் உங்களுக்குள் வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே: திருப்பதிக்கு செல்லும் போது மறக்காமல் செய்ய வேண்டியது

வாராகி அன்னை உங்களை ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து காப்பாற்றி கொடுப்பாள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த மந்திர வார்த்தை தான் இது. வராகித் தாயின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் எளிமையான இந்த மந்திர வார்த்தையை உச்சரித்து பலன் பெறவும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்