இன்றைய சூழ்நிலையில் திருமணம் ஆகாத பெண்களுக்கு, திருமணம் நடப்பது என்பது பெரிய குதிரை கொம்பாக இருக்கிறது. திருமண வயதை கடந்தும், திருமணம் நடக்காமல் இருக்கக்கூடிய பெண்களுக்காக எளிமையான ஆன்மீகம் சொல்லும் ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
எளிமையான பரிகாரம் என்று சொல்லுவதை விட, இது அதிசக்தி வாய்ந்த பரிகாரம். சக்தியின் உருவமாக இருக்கும் பெண்கள், சக்தி தேவைக்கு இந்த விளக்கை போட்டால் 27 வாரத்தில் நிச்சயம் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அந்த விளக்கை எப்படி ஏற்ற வேண்டும் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
பெண்களுக்கு திருமணம் நடக்க பரிகாரம்
வெள்ளிக்கிழமை தோறும் பெண்கள் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குழித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும். காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். தண்ணீரை மட்டும் பருகி விட்டு விரதம் இருங்கள். அம்மா தாயே! எனக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும், என் மனதிற்கு பிடித்தபடி கணவர் அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணி வரை ராகுகால நேரம் வரும். இந்த நேரத்தில் துர்க்கை அம்பாள் கோவிலுக்கு சென்று 2 மண் அகல் விளக்குகளில் சுத்தமான நெய் விட்டு, பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அந்த அம்பாளுக்கு முன்பாக முட்டிப்போட்டு வேண்டுதல் வைக்கவும். மண்டியிட்டு வேண்டுதல் வைப்பது என்று சொல்லுவார்கள் அல்லவா.
அதுபோல துர்கை அம்மனுக்கு நேர் எதிரில் மண்டி போட்டு திருமணம் ஆகாத பெண்கள் தனக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று அந்த துர்க்கை அம்பாளிடம் வரத்தை கேட்டால், கேட்க வரம் அப்படியே கிடைக்கும். 27 வாரம் வெள்ளிக்கிழமை இந்த விளக்கை ஏற்ற வேண்டும். இடையில் வரக்கூடிய மாதவிடாய் நாட்களை மட்டும் தவிர்த்து விட்டு, மற்ற வாரங்களை தவிர விடாமல் விளக்கு போடும்போது நிச்சயம் திருமணம் நடக்கும்.
ஏனோ தானோ என்றெல்லாம் மாப்பிள்ளையை அம்பாள் உங்களுக்கு பார்த்து தர மாட்டாங்க. உங்கள் மனசுக்கு பிடித்தபடி உங்களை கடைசிவரை பத்திரமாக பார்த்துக் கொள்ளக்கூடிய கணவர் உங்களுக்கு கிடைப்பார். நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செஞ்சு பாருங்க. இப்படி ராகுகால நேரத்தில் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்பவர்கள் வெள்ளிக்கிழமை காலை நேரத்திலோ, மாலை நேரத்திலோ விளக்கு போடலாம்.
திருமணமாகாத பெண்னின் அம்மா இந்த பரிகாரத்தை செய்யலாமா என்ற சந்தேகம் நிறைய பேருக்கு வரும். யாருக்கு பிரச்சனை இருக்கிறதோ, அவர்கள் நேரில் சென்று அம்பாளிடம் வரங்களை கேட்கும் போது தான் அதற்குண்டான பலன் முழுமையாக கிடைக்கும். உங்களுடைய பெண் பிள்ளை வெளிநாட்டில் இருக்கிறார்கள்.
இதையும் படிக்கலாமே: தினமும் நம்மை தொடரும் கண் திருஷ்டி விலக பரிகாரம்
அல்லது விளக்கு போட முடியாத சூழ்நிலையில் வேலை பார்க்கிறார்கள் அப்படி என்னும் பட்சத்தில் மட்டும் அவர்களுடைய தாய் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஆனால் திருமணம் ஆகாதா அந்த பெண்ணின் கையால் இந்த வழிபாட்டை செய்யும் போது பலன் பல மடங்கு சீக்கிரம் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.