நம்முடைய வீடாக இருந்தாலும் சரி, வியாபாரம் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, நம்மை நாலு பேர் பார்க்கும்போது, கண் திருஷ்டி விழத்தான் செய்யும். எல்லோரும் ஒரே மாதிரி நல்ல மனதோடு இருக்க மாட்டார்கள். இன்றைக்கு நம்முடைய கடையில் ஜாம் ஜாம் என வியாபாரம் நடக்கிறது அதை பார்க்கும் மற்றவர்கள் கண்கள் உறுத்தும்.
இவன் கடையில் மட்டும் எவ்வளவு கூட்டம், இன்றைக்கு எவ்வளவு லாபம் வந்திருக்கும், என்று ஒரு சின்ன பார்வை பார்த்தால் போதும். அடுத்த நாள் வியாபாரம் படுமோசமாக படுத்து விடும். நம்முடைய வீட்டை எடுத்துக் கொள்வோம். சந்தோஷமாக குடும்பத்தோடு ஒரு காரில் வெளியிடங்களுக்கு சென்று வீடு திரும்புவோம். வாடகை காராக தான் இருக்கும். அதை பார்க்கும் அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பாங்க.
இவங்க எவ்வளவு ஜாலியா இருக்காங்க. சந்தோஷமா ஊரை சுத்திக்கிட்டு இருக்காங்க அப்படின்னு நினைச்சா போதும். அடுத்த நாளே நம்ம வீட்ல சண்டை வந்துவிடும். நிம்மதியா இருந்த குடும்பத்தில் நிம்மதி கெட்டுப் போய்விடும். இப்படிப்பட்ட கண் திருஷ்டியை விளக்குவதற்கு நிறைய பரிகாரங்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதில் ஒரு எளிமையான சிறப்பான பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.
கண் திருஷ்டி நீக்கும் எளிமையான பரிகாரம்
பொதுவாக வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறை கண் திருஷ்டி கழிப்பதை வழக்கமாக வைத்திருப்போம். அதைவிட சிறப்பு என்ன என்றால், தினம் தினம் திருஷ்டி கழிப்பதுதான். அதற்கான பரிகாரம் தான் இது. இதற்கு 1/2 கிலோ கல்லுப்பு, 1/2 கிலோ படிகார கல் நமக்கு தேவை. இரண்டையும் சம அளவு வாங்கிக் கொள்ளுங்கள். படிகார கல்லை இடித்து தூள் செய்தால், அதுவும் கல் உப்பு போலவே நமக்கு கிடைக்கும்.
இந்த இரண்டு பொருளையும் ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் கொட்டி மூடி போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு, ஒரு சின்ன அகல் விளக்கில் 1 ஸ்பூன் நாம் கலந்து வைத்திருக்கும் கலவையைப் போட்டு, அதன் மேலே ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து நிலை வாசலுக்கு வெளியே ஏற்றி வைத்துவிட்டு, நீங்கள் பாட்டுக்கு வந்து கை கால்களை அலம்பி கொண்டு முகம் கழுவி தூங்க செல்ல வேண்டும். அவ்வளவுதான்.
மறுநாள் காலை வாசல் கூட்டும்போது அந்த மண் அகல் விளக்கில் இருக்கும் எரிந்த சாம்பலை அப்படியே குப்பை தொட்டியில் கொட்டி அந்த அகல் விளக்கை கழுவி ஓரமாக வைத்து விடுங்கள். தினமும் இதை செய்தாலே போதும் உங்கள் வீட்டில் தினம் தினம் திருஷ்டி கழியும்.
இதே போல கடையோ தொழிற்சாலையோ எதுவோ, வியாபாரம் செய்யும் இடம் அதை இரவு மூடிவிட்டு, வெளியே ஒரு மண் அகல் விளக்கை வைத்து டப்பாவில் இருக்கும் இந்த கலவையை ஒரு ஸ்பூன் வைத்து ஒரு கட்டி கற்பூரத்தை வைத்து ஏற்றிவிட்டு திரும்பி பார்க்காமல் வீடு செல்லுங்கள். அவ்வளவுதான்.
இதையும் படிக்கலாமே: திருமண தடை விலக குலதெய்வ வழிபாடு
மறுநாள் காலை வந்து அதை அப்புறப்படுத்திவிட வேண்டும். தினமும் ஒரே மண் அகல் விளக்கை பயன்படுத்தலாம் தவறு ஒன்றும் கிடையாது. இந்த பரிகாரம், கண் திருஷ்டியில் இருந்து உங்களை 100% காப்பாற்றி விடும் என்பது நம்பிக்கையாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு தேவை என்றால் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.