ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு நேரத்தில் திடீர் திருப்பங்கள் உருவாகும். அதில் முக்கியமான ஒன்றாக சொல்வது ஆலய தரிசனங்கள். ஏனெனில் சில ஆலய தரிசனங்கள் நம்முடைய வாழ்க்கையின் பயணத்தையே மாற்றி விடுவதாக சொல்லப்படுவதோடு நம்பப்படுகிறது. அந்த வகையில் இதில் புகழ் பெற்ற ஒரு ஆலயமாக திகழ்வது திருப்பதி. அப்படி திருப்பதி சென்று வந்து நல்ல நிலைமைக்கு மாறியவர்கள் எத்தனையோ பேரு உண்டு.
திருப்பதி சென்று வந்து துன்பம் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி அல்லாமல் திருப்பதி சென்று வந்தாலே நம்முடைய வாழ்க்கை மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஒரு எளிய வழிமுறைகளை கடைப்பிடித்தால் போதும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
செல்வம் பெருக திருப்பதி பெருமாள்
திருப்பதி சென்றாலே திருப்ப ம்தான் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அப்படி சென்றும் திருப்பம் ஏற்படாதவர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி இப்போதைய சூழ்நிலையில் சில ராசிக்காரர்கள் திருப்பதி செல்லக் கூடாது என்று சொல்கிறார்கள்.
இந்த முறையில் செல்லும் போது எந்த ராசிக்காரர்கள் திருப்பதி சென்றாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம் என்று சொல்லப்படுகிறது. இனி நீங்கள் திருப்பதி செல்ல முடிவு செய்து பிறகு வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது ஒரு கைப்பிடி உப்பை கொண்டு செல்லுங்கள்.
இந்த உப்பை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். ஆனால் பத்திரமாக கீழே சிதறாத படியும்
உப்பிலிருந்து தண்ணீர் விடாத அளவிற்கு கொண்டு செல்லுங்கள். இந்த உப்பை வீட்டிலிருந்து கிளம்பியது முதல் திருப்பதி ஏழுமலையான் தரிசனம் கண்டு திரும்பும் வரை உங்கள் கையிலே இருக்க வேண்டும்.
ஆலயத்திற்குள்ளே பையை கொண்டு செல்ல விட மாட்டார்களே என்ன செய்வது என்று கேட்கலாம். நீங்கள் உங்களுடைய மணி பர்ஸ் அல்லது கையில் கொண்டு செல்லும் ஹேண்ட் பேக் போன்றவற்றில் இந்த உப்பை வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தரிசனம் முடிந்து நீங்கள் வீட்டிற்கு வந்த பிறகு இந்த உப்பை உங்கள் சமையலறையில் இருக்கும் பெண்ணுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
இந்த உப்பை நீங்கள் சைவம் அசைவம் என எது சமைத்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த உப்பு ஆனது மகாலட்சுமி தாயாரின் அம்சம் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் உப்பு சந்திரனுக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது. திருப்பதி சென்று அந்த ஆற்றலுடன் திரும்பிய இந்த உப்பு நம் உணவில் கலந்து அதை நாம் உண்ணும் பொழுது நம்முடைய செல்வ நிலை பல மடங்கு பெருகும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: சொந்தமாக இடம் வாங்க செய்ய வேண்டிய வழிபாடு
இந்த முறையில் திருப்பதி தரிசனம் சென்றால் எந்த ராசிக்காரர்கள் நட்சத்திரக்காரர்கள் சென்றாலும் எப்பேர்பட்ட சூழ்நிலையில் உள்ளவர்களும் நிச்சயம் வாழ்க்கையில் திருப்பத்தை அடையலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த ஒரு எளிய சூட்சம வழிமுறையை கடைப் பிடித்தால் உங்களுடைய வாழ்க்கையின் தரித்திர நிலையை மாற்றி செல்வ நிலைக்கு உயர முடியும் என்று சொல்லப்படுகிறது.