ஒருவர் தன்னுடய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவர் சிறிது சிறிதாக பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும். அப்படி பொருளாதார ரீதியாக முன்னேறிய நபர்கள் அடுத்ததாக படிப்படியாக சொத்துக்களை சேர்க்க ஆசைப்படுவார்கள். இப்படி சொத்துக்களை சேர்க்க ஆசைப்படும் நபர்கள் முதலில் வாங்குவது ஒரு இடத்தை தான். இந்த இடத்தை வாங்குவதற்கு தங்களிடம் பணம் இருந்தாலும் பலருக்கும் சொந்தமாக இடம் வாங்கும் யோகம் என்பது இல்லாமல் போய்விடும். ஒரு சிலருக்கு பணமே இல்லாத சூழ்நிலையிலும் இடம் வாங்கும் யோகம் இருக்கும் பட்சத்தில் கடனை வாங்கியாவது இடத்தை வாங்கி விடுவார்கள். இப்படி இடம் வாங்கும் யோகம் வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
பெருமாள் மற்றும் குலதெய்வ வழிபடு
காலியாக இருக்கும் இடத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் புதன் பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் நன்றாக இருந்தால் அவர் கண்டிப்பான முறையில் சொந்தமாக இடம் வாங்கி விடுவார், அவ்வாறு இல்லாமல் புதன் பகவானுடன் சனி, ராகு, செவ்வாய் போன்ற கிரகங்கள் ஒன்றிணைந்தாலோ அல்லது பார்த்தாலோ அவரிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அவரின் பெயரில் சொந்தமாக ஒரு இடத்தை கூட வாங்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.
இப்படிப்பட்டவர்கள் புதன் பகவானுக்குரிய தெய்வமாக கருதப்படும் பெருமாளை வழிபட வேண்டும். அதிலும் குறிப்பாக சொந்தமாக இடம் வாங்கும் யோகம் இல்லாதவர்களும், சொந்தமாக இடம் வாங்குவதில் தடைகள் ஏற்பட்டு இருப்பவர்களும் அஸ்தம் நட்சத்திர நாளன்று திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை வழிபட வேண்டும். அஸ்தம் நட்சத்திர நாளில் செல்ல இயலாதவர்கள் பௌர்ணமி திதியில் சென்று வழிபடலாம். பௌர்ணமி திதி அன்றும் செல்ல இயலாது என்று நினைப்பவர்கள் புதன்கிழமையில் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை வழிபட வேண்டும்.
இப்படி வழிபாடு செய்வதன் மூலம் புதன் பகவானின் அருளை நம்மால் பெற முடியும். புதன் பகவானின் அருளை மட்டும் பெற்றால் போதுமா? மற்ற கிரகங்களால் ஏற்பட்ட தடைகள் நீங்க வேண்டும் அல்லவா? அப்படி மற்ற கிரகங்களால் ஏற்பட்ட தடைகள் நீங்க வேண்டும் என்றால் நம்முடைய குலதெய்வத்தை நாம் வழிபட வேண்டும்.
அதிலும் குறிப்பாக அஸ்வினி நட்சத்திரம் வரும் நாள் அன்று குலதெய்வ கோவிலுக்கு சென்று முறையாக குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மற்ற கிரகங்களால் ஏற்பட்ட பாதிப்புகளும் தடைகளும் விலகும். இந்த இரண்டு வழிபாட்டையும் செய்து முடித்த பிறகு சொந்தமாக இடம் வாங்க முயற்சி செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நமக்கு சொந்த இடம் வாங்கும் யோகம் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: குலதெய்வ அருளை பெற உதவும் எலுமிச்சை பழம்
எளிமையான இந்த வழிபாட்டை செய்பவர்களுடைய வாழ்க்கையில் திருப்பதி வெங்கடாசலபதியின் அருளோடும் குலதெய்வத்தின் அருளோடும் சொத்துக்களை சேர்த்து நல்ல நிலைக்கு வர முடியும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்யலாம் என்ற தகவலுடன் நிறைவு செய்து கொள்ளுவோம்.