எல்லோருக்கும் பண பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒரு சில பேரால் அவர்களுக்கு சொந்தமான பணத்தை கூட கையில் தொட முடியாத சூழ்நிலை இருக்கும். அதாவது வேலை செய்யும் இடத்திலும் சம்பளம் சரியான நேரத்தில் கைக்கு வந்து சேராது. தொழில் செய்யும் இடத்திலும் கடன் தொகை சரியான நேரத்தில் வசூல் ஆகாது. எல்லாமே நம்ம பணம் தான்.
நாம் உழைத்து சம்பாதித்த பணம் தான். ஆனால் நம்முடைய கைக்கு பணம் வராது. இதுதான் பணத்தடை. தேன் போல பேசி கடனுக்காக பொருளை வாங்கிக் கொண்டு செல்வார்கள். அந்த கடனை திரும்பவும் கேட்கும் போது வார்த்தைகள் அப்படியே பாவக்காய் கசப்பாக வெளிப்படும்.
இப்படிப்பட்ட பிரச்சனை உங்களுக்கு இருக்கிறதா. நிறைய பணம் வெளியில் சிக்கி இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் எப்படியாவது வசூல் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் வியாழக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் தடையில்லாத பணப்புழக்கம் இருக்கும்.
பணத்தடை நீங்க பரிகாரம்
வியாழக்கிழமை குரு ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். கொஞ்சமாக பச்சரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சொட்டு நெய் விட்டு, கொஞ்சமாக மஞ்சள் பொடி போட்டு கலந்தால் அட்சதையாக அந்த பச்சரிசி மாறிவிடும். ஒரு சிவப்பு துணியில் அந்த பச்சரிசியை வைத்து, சின்ன முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இதை உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.
கிழக்கு பார்த்து அமர்ந்து உங்களுக்கு வரவேண்டிய பணம் சரியான நேரத்தில் வசூலாக வேண்டும், சரியான நேரத்தில் கைக்கு பணம் வர வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள், அல்லது குறிப்பிட்ட இந்த நபர் உங்களுக்கு பணம் தர வேண்டும் என்று இருக்கும் அல்லவா. அந்த நபர் பேரைச் சொல்லி அவர்களிடம் இருந்து எப்படியாவது பணத்தை வாங்கி விட வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கலாம்.
பிரார்த்தனையை முடித்துவிட்டு இந்த முடிச்சை அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். அடுத்த வியாழக்கிழமை இந்த முடிச்சை எடுத்து பிரித்து, இந்த அரிசியை பறவைகளுக்கு இரையாக போட்டு விட வேண்டும். மீண்டும் புது அட்சதையை அந்த சிவப்பு துணியில் வைத்து, முடிச்சு போட்டு உள்ளங்கைகளில் அந்த முடிச்சை வைத்து, பிரார்த்தனை செய்து பணப்பெட்டியில் அந்த முடிச்சை வைக்க வேண்டும்.
இதே போல வியாழக்கிழமை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வர, உங்களுக்கு வர வேண்டிய பணம் தானாக வந்து சேரும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. வியாழக்கிழமை குரு ஹோரை நேரம் காலை 6 – 7, மதியம் 3 – 4, இரவு 8 – 9 இந்த மூன்று மணி நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமாக இருக்குமோ, அந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: பொருளாதாரம் முன்னேற்றத்திற்கு வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு
இந்த பரிகாரத்தை செய்த ஓரிரு வாரங்களில், உங்களுக்கு வரவேண்டிய பணம் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கைக்கு வந்து சேரும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்து பலன் அடையவும்.