வருமானமே இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், பொருளாதார சூழ்நிலையில் ரொம்பவும் நலிந்தவர்கள், பணக்கஷ்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் இன்றைய தினம் பைரவரை பின் சொல்லக்கூடிய முறைப்படி வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். செல்வ வளம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.
ஒட்டுமொத்த பொருளாதார பிரச்சனையில் இருந்தும் விடுபட இன்று 15-05-2024 வளர்பிறை அஷ்டமி திதியில் மாலை நேரத்தில் பைரவர் கோவிலில் ஏற்ற வேண்டிய தீபம், சொல்ல வேண்டிய மந்திரம் என்ன ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு
வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்றால், வளர்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்வது மிக மிக சிறப்பான பலனை தரும். பெரும்பாலும் இந்த ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா இடத்திலும் இருக்க மாட்டார். ஒரு சில சிவன் கோவிலில் மட்டும் தான் இருப்பார். அதனால் வாய்ப்பு கிடைப்பவர்கள் இந்த வழிபாட்டை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இல்லையென்றால் காலபைரவர் சன்னிதானத்திலேயே, ஸ்வர்ணாகர்ஷனை பைரவரை நினைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தவறு கிடையாது. இன்று மாலை பைரவரது சிறப்பு பூஜையில் கலந்து கொள்ளுங்கள். பைரவருக்கு 2 மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். செவ்வரளி பூக்களை வாங்கிக் கொண்டு போய் பைரவருக்கு கொடுத்து விடுங்கள்.
இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு பைரவர் சன்னிதானத்தில் அமர்ந்து ‘சொர்ண ஆகர்ஷண பைரவரே போற்றி! ஓம் தனநாதா போற்றி போற்றி’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்களது பூமி சார்ந்த பிரச்சனை தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.
நிலம் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், வீடு வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்களுடைய ஆசை நிறைவேறும். சில பேர் நிலம் வாங்கி அது சிக்கலில் சிக்கி இருக்கும், வீடு கட்டி பாதியிலேயே நின்றிருக்கும், அப்படிப்பட்ட பூமி சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏதாவது இருந்தாலும் அதற்கு உண்டான தீர்வை பெற இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
பொருளாதார சூழ்நிலையில் நீங்கள் உயர்ந்து நிற்க வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். பைரவர் உங்களுக்கு மன தைரியத்தை கொடுத்து, பணத்தை சம்பாதிக்க கூடிய தெம்பையும் கொடுத்துவிடுவார்.
இதையும் படிக்கலாமே: சிவ அருள் பெற ருத்ராட்ச வழிபாடு
இன்று மாலை கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள், வீட்டு பக்கத்தில் சிவன் கோவில் இல்லை என்பவர்கள், வீட்டிலேயே பூஜையறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, சொர்ணாகர்ஷன பைரவரை மனதார நினைத்து இந்த மந்திரத்தைச் சொன்னாலும், உங்களுக்கு முழு பலன் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.