சொந்தமாக வீடு வாங்க வேண்டும். நிலம் வாங்க வேண்டும் என்பதற்காக குருவி சேர்ப்பது போல பணத்தை சேர்த்து வருவோம். ஆனால் ஒரு குறிப்பிட்ட தொகை பணம் சேர்ந்ததும் வேறு ஏதாவது பெரிய அளவில் செலவு வந்து கையில் இருக்கும் பணம் கரைந்து போகும். அப்படி இல்லையா. நாம் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த வீடு, நிலத்தின் விலை, உயரும்.
இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை வந்து நாம் வீடு வாங்குவதை நிலம் வாங்குவதை தடுத்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக இந்த பிரச்சனை நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிகமாக இருக்கும். நீங்களும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் இந்த ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்து பாருங்கள். 6 மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் சொந்த வீடு வாங்கும் யோகம் தானாக உங்களைத் தேடி வரும்.
சொந்த வீடு வாங்க செய்ய வேண்டிய தானம்
முதலில் பரிகாரம் என்ன என்பதை சுருக்கமாக பார்த்து விடுவோம். ஞாயிற்றுக்கிழமை கல்கண்டு, பச்சரிசி இந்த இரண்டு பொருட்களையும் வாங்கிக் கொண்டு போய் உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது கோவிலுக்கு தானம் கொடுக்க வேண்டும். 100 கிராம் கல்கண்டு, 1 கிலோ பச்சரிசி வாங்கி கொடுத்தால் கூட போதும்.
ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து இந்த தானத்தை செய்து வர, நிச்சயமாக உங்களுக்கு சொந்த வீடு வாங்குவதில் இருக்கும் தடை, சொந்த நிலம் வாங்குவதில் இருக்கும் தடையானது கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கும். ஜாதக கட்டத்தில் செவ்வாய் சந்திரன் பிரச்சனைக்குரிய கிரகங்களாக மாறிவிட்டால், நம்மால் சொத்து சுகம் வாங்கி சேர்க்க முடியாது. அவர்கள் இருவரையும் சரி கட்ட தான் இந்த பரிகாரம்.
செவ்வாய் பகவானின் காரகத்துவம் கல்கண்டு. சந்திர பகவானின் காரகத்துவம் பச்சரிசி இந்த இரண்டு பொருட்களையும், சூரியனுக்கு உரிய கிழமையான ஞாயிற்றுக்கிழமை அன்று தானம் செய்யும்போது, அந்த இரண்டு கிரகங்களும் உங்களுக்கு சரியாக வேலை செய்ய தொடங்கிவிடும்.
ஜாதக கட்டத்தில் உங்களால் வீடு வாங்க முடியாது நிலம் வாங்க முடியாது என்ற சூழ்நிலை இருந்தாலும், அதனுடைய தாக்கம் கொஞ்சமாக குறைந்து, உங்களால் அந்த சொத்தை வாங்க முடியவில்லை என்றாலும், உங்களுடைய பிள்ளைகள் அந்த சொத்தை வாங்குவதற்கான யோகத்தை கொடுப்பதற்கு இந்த பரிகாரம் வழி வகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பரிகாரத்தோடு சேர்த்து செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை தொடர்ந்து முருகனை வழிபாடு செய்து கொண்டே வந்தால், நிச்சயமாக உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் சொந்த வீட்டில் வசிக்கும் யோகத்தை, அந்த முருகப்பெருமான் கொடுத்துவிடுவார்.
செவ்வாய்க்கிழமை உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று செவ்வரளி பூக்கள் வாங்கி கொடுத்து, ஒரே ஒரு விளக்கு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு போட்டு சொந்த நிலம் வாங்கணும் முருகா, சொந்த வீடு வாங்கணும் முருகா, என்று வேண்டுதல் வையுங்கள்.
இதையும் படிக்கலாமே: காரிய வெற்றி ஏற்பட விநாயகர் வழிபாடு
பிறகு எல்லாவற்றையும் அந்த முருகன் பார்த்துக் கொள்வான். பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். கையில் பணம் நிறைய சேர தொடங்கும். நல்லது நடக்க ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரங்களில் நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறவும்.