- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுலதெய்வ சாபம் நீங்கி வசியம் ஏற்பட பரிகாரம்

குலதெய்வ சாபம் நீங்கி வசியம் ஏற்பட பரிகாரம்

- Advertisement -

ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் அவனுக்கு குலதெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்க வேண்டும். அப்படி கிடைக்கும் பட்சத்தில் தான் அவருடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமோ அல்லது நல்லவைகளோ நடக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்காத பட்சத்தில் அவருக்கு எந்த வித நன்மைகளும் நடக்காது. மேலும் அவர் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அந்த தெய்வத்தால் பலன்கள் ஏற்படாது என்று தான் கூற வேண்டும்.

அப்படி நம்மை காக்கக்கூடிய முதல் தெய்வமாக வரக்கூடிய குல தெய்வத்தினால் ஒரு சிலருக்கு சாபமோ குற்றமோ ஏற்பட்டு அதனால் பாதிக்க கூடிய நிலைக்கும் செல்வார்கள். அப்படி குலதெய்வ சாபமோ, குற்றமோ இருப்பவர்கள் அந்த சாபம் குற்றத்தை நீக்குவதற்கும், குலதெய்வத்தை வசியம் செய்வதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

தினமும் எந்த தெய்வத்தை நாம் வழிபடுகிறோமோ இல்லையோ ஆனால் குலதெய்வத்தை கண்டிப்பான முறையில் நினைத்து வழிபட வேண்டும். இயன்றவர்கள் மாதத்திற்கு ஒரு முறை குலதெய்வ ஆலயத்திற்கு செல்லலாம். அப்படி முடியாத பட்சத்தில் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ ஆலயத்திற்கு சென்று அந்த தெய்வத்திற்குரிய முறையான வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

அதோடு மட்டுமல்லாமல் அவனுடைய வாழ்க்கையில் எந்த நன்மைகள் நடந்தாலும் அந்த நன்மைக்கு நன்றி கூறும் விதமாக குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும். குலதெய்வத்தால் ஏற்பட்ட சாபமோ, குற்றமோ நீங்குவதற்கு முதலில் பரிகாரத்தை செய்துவிட்டு பிறகு குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால்தான் முழு பலனை பெற முடியும். அப்படிப்பட்ட சாபத்தை நீக்கக்கூடிய பரிகாரத்தை முதலில் பார்ப்போம்.

- Advertisement -

கண்டிப்பாக அனைவரின் இல்லங்களிலும் குல தெய்வத்தின் படம் என்பது இருக்கும். அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சாதாரண விளக்கு தீபத்தில் குலதெய்வத்தை நம்மால் ஆவாகனம் செய்ய முடியும். இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். அதாவது காலை 5:30 மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும்.

குலதெய்வத்தின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு குலதெய்வத்திற்கு பிடித்தமான மலர்களை வாங்கி சாற்றுங்கள். அடுத்ததாக கடையிலிருந்து வாழைத்தண்டு திரி என்று விற்கும். அந்த திரியை வாங்கி வந்து பன்னீரில் நனைத்து காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குலதெய்வ படத்திற்கு முன்பாக புதிதாக வாங்கிய இரண்டு அகல் விளக்குகளை வைத்து அதில் இலுப்பை எண்ணெயை ஊற்றி நாம் தயார் செய்து வைத்திருக்கும் வாழைத்தண்டு திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தினமும் குலதெய்வத்திற்கு முன்பாக வாழைத்தண்டு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வர குலதெய்வ சாபம் அல்லது குற்றம் நீங்கும்.

இதோடு மட்டுமல்லாமல் குலதெய்வத்தை வசியம் செய்வதற்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தை இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு 18 முறை கூறி வர குலதெய்வ குற்றம் நீங்குவதோடு மட்டுமல்லாமல் குலதெய்வ வசியம் ஏற்பட்டு குலதெய்வத்தின் அருளை நம்மால் பெற முடியும்.

மந்திரம்

ஓம் என் குலதெய்வம் வர வர
ஓம் வம் வம் உம் உம்
என் படி ஏறி வா வா
என் குலதெய்வமே

இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றல்கள் விலக பரிகாரம்

குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் குலதெய்வத்தால் ஏற்பட்ட சாபங்கள் நீங்கவும் இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் செய்து பலன் அடையுங்கள்.

சற்று முன்