- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிர்மறை ஆற்றல் நீங்கி பண வரவு அதிகரிக்க

எதிர்மறை ஆற்றல் நீங்கி பண வரவு அதிகரிக்க

- Advertisement -

நம்மை சுற்றி நேர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் நமக்கு நன்மைகளே அதிகமாக ஏற்படும். இதே நம்மை சுற்றி எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருந்தால் எதிர்மறையான நிகழ்வுகள் தான் ஏற்படும். இப்படி எதிர்மறையான அதிர்வலைகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் நமக்கு எந்தவித முன்னேற்றமும் ஏற்படாது. முன்னேற்றம் ஏற்படா விட்டால் பணவரவு என்பதும் ஏற்படாது. இதனால் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலை உண்டாகும்.

ஆக நம்மை சுற்றி இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை நாம் விலக்கினாலேயே நமக்கு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எதிர்மறை ஆற்றல்களை விலக்கவும் பணவரவை அதிகரிக்கவும் செய்யக்கூடிய கிராம்பு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

எதிர்மறை ஆற்றல்களை விலக்கி பண வரவை அதிகரிக்கும் கிராம்பு

மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கும் பொருட்களுள் ஒன்றாக திகழ்வதுதான் கிராம்பு. இந்த கிராம்பு யாருடைய வீட்டில் அதிகமாக இருக்கிறதோ, யாருடைய வீட்டில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறதோ அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருப்பதற்கு உரிய வாய்ப்புகள் இல்லை. அதோடு மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாரின் அருளையும் பெற முடியும் என்று கூறப்படுகிறது.

எந்த அளவிற்கு கல் உப்பு நம்முடைய வீட்டில் குறையாமல் இருக்க வேண்டுமோ அதே போல் கிராம்பும் நம்முடைய இல்லத்தில் கண்டிப்பான முறையில் இருக்க வேண்டிய பொருளாக கருதப்படுகிறது. இந்த கிராம்பின் மூலம் நமக்கு பல மருத்துவர் ரீதியான நன்மைகள் ஏற்படுவது போல தான் ஆன்மீக ரீதியாகவும் பல நன்மைகள் தரக் கூடியதாக இந்த கிராம்பு திகழ்கிறது. இந்த கிராம்பை வைத்து பல பரிகாரங்கள் செய்தாலும் பணவரவை அதிகரிப்பதற்கு செய்யக்கூடிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ஒரு கண்ணாடி பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிறைய கல் உப்பை போட்டு அதற்கு மேல் ஏழு கிராம்பை வைக்க வேண்டும். கண்டிப்பாக முறையில் நம் அனைவரின் இல்லத்திலும் பீரோ என்ற ஒன்று இருக்கும். அதை முடிந்த அளவிற்கு பலரும் தென்மேற்கு மூலையில் தான் வைத்திருப்பார்கள். அந்த பீரோவிற்கு அடியில் இந்த கண்ணாடி பவுலை வைத்து விடுங்கள்.

சரியாக ஒரு மாதம் கழித்து இந்த பவுலை எடுத்து அதில் இருக்கக்கூடிய கல் உப்பை தண்ணீரில் கரைத்து விட வேண்டும். மறுபடியும் புதிதாக உப்பு, கிராம்பை வைத்து பீரோவுக்கு அடியில் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த இடத்தில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். இதோடு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

- Advertisement -

இதே போல் ஏழு கிராம்பை ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடத்தில் வைப்பதன் மூலமும் பணவரவு என்பது அதிகரிக்கும். இப்படி மஞ்சள் துணியில் வைப்பதால் மகாலட்சுமி தாயாரின் அருளும் அதே சமயம் குருபகவானின் அருளும் ஒரு சேர கிடைத்து பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

இதேபோல் கிராம்பை மாலையாக கட்டி வீட்டு பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமி, துர்க்கை அம்மன், பெருமாள், விநாயகர் இவர்களில் யாருக்காவது ஒருவருக்கோ அல்லது இவர்கள் நால்வருக்குமே போடுவதன் மூலம் நேர்மறை ஆற்றல்கள் அதிகரித்து மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். இந்த கிராம்பு பரிகாரத்தை செய்யும் பொழுது கிராம்பின் மொட்டு உடையாமல் இருப்பது போல் பார்த்துக் கொண்டு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வளர்பிறை பிரதோஷத்தில் செய்ய வேண்டியது

இது போல் பல பரிகாரங்கள் கிராம்பை வைத்து செய்யலாம். இந்த தகவலில் நம்பிக்கை இருப்பின் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து உங்கள் இல்லத்தில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விலக்கி பணவரவை அதிகரித்து கொள்ளுங்கள்.

சற்று முன்