- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர்க்கும் முருகர் வழிபாடு

கடன் தீர்க்கும் முருகர் வழிபாடு

- Advertisement -

பொதுவாகவே கடன் பிரச்சினை தீருவதற்கு முருகப்பெருமான் வழிபாடு கை கொடுக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம் தான். அந்த வகையில் முருகப்பெருமானுக்கு விசேஷமான நாட்கள் வரும்போது அந்த நாளில் முருகனை வழிபாடு செய்வது இரட்டிப்பு பலனை கொடுக்கும். அந்த வகையில் நாளைய தினம் 22/5/2024 புதன்கிழமை வைகாசி விசாகம் திருநாள் வரவிருக்கின்றது.

இந்த நாளில் முருகனுக்கு கோலாகலமாக திருவிழா நடக்கும். முருகர் அவதரித்த இந்த நாளில் முருகருக்கு பிடித்தமான இந்த மூன்று பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தால் உங்களை தொடரும் கஷ்டங்கள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த மூன்று பொருட்கள் என்னென்ன. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

முருகனுக்கு உகந்த 3 பொருட்கள்

முருகப்பெருமானுக்கு உரிய தானியம் துவரம் பருப்பு. நாளைய தினம் துவரம்பருப்பு புதுசாக வாங்கி ஒரு சின்ன கிண்ணத்தில் கொட்டி முருகரிடம் வைத்து வழிபாடு செய்வது சிறப்பு. சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், சொந்த நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வீடு நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள், வீட்டைக் கட்டி பாதியிலேயே நிற்கிறது என்பவர்கள் எல்லாம், இந்த ஒரு பொருளை நாளைய தினம் வாங்கி முருகனின் பாதத்தில் வைத்து பிரார்த்தனை வைத்தால், அந்த பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வு உடனே கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படி வைத்த துவரம் பருப்பை எடுத்து நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தலாம்.

அடுத்ததாக முருகப் பெருமானுக்கு சூட்ட வேண்டிய பூ. செவ்வரளி பூ. அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும் செம்பருத்திப்பூ. செவ்வரளி பூ தான் முதலிடத்தில் இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இருக்கும் அரளி பூவை வாங்கி முருகப்பெருமானுக்கு நாளை உங்கள் கையால் சாத்தினால் உங்கள் கடன் சுமை குறையும். வீட்டில் இருக்கும் முருகனுக்கும் இந்த பூவை சூட்டலாம்.

- Advertisement -

கோவிலுக்கும் இந்த பூவை வாங்கிக் கொடுக்கலாம். அது உங்களுடைய விருப்பம். செவ்வரளி பூவை போட்டு முருகா என் கடன் பிரச்சனைக்கு ஒரு தீர்வை கொடு என்று பிரார்த்தனை வைத்தால் உங்கள் கடன் சுமை படிப்படியாக குறைய தொடங்கி விடும். செவ்வரளி பூ கிடைக்காத பட்சத்தில் சிவப்பு செம்பருத்தி கூட முருகப்பெருமானுக்கு நாளைய தினம் சூட்டலாம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுள் இல்லை என்று சொல்லுவார்கள். அந்த வகையில் நாளைய தினம் சுக்கு வாங்கி முருகனின் திருவுருவப் பாதத்தில் வைத்து வழிபாடு செய்வது சிறப்பு. மன தைரியம் இல்லாதவர்கள், ஆரோக்கியம் இல்லாதவர்கள், எப்போதுமே சோர்வாக இருப்பவர்கள், கோழையாக இருப்பவர்கள் எல்லாம் இந்த வழிபாட்டை செய்தால் உங்களுக்கான மன தைரியம் பிறக்கும்.

- Advertisement -

முருகப்பெருமானின் கையில் இருக்கும் ஆயுதமான வேலுக்கு எந்த அளவுக்கு தைரியமும் சக்தியையும் இருக்கிறதோ, அந்த வேல் எத்தனை அசுரர்களை வீழ்த்தி இருக்கிறதோ, அதுபோலத்தான் உங்களுடைய மனதும் தைரியமாகவும் தெம்பாகவும் மாறும், கோழை என்ற அசுரனை வேதம் சோம்பேறித்தனத்தை வீழ்த்தும், என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: வைகாசி விசாகம் 2024

இந்த சுக்கை இடித்து தூள் செய்து முருகர் மந்திரத்தை சொல்லி, உருவேற்றி ஒரு தாயத்தில் போட்டு கழுத்தில் கட்டிக் கொண்டால் அந்த முருகன் எப்போதுமே உங்களுக்கு துணையாக இருப்பார். முருகா முருகா என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி சுக்குத்தூளை தாயத்துக்குள் போடலாம். மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.

சற்று முன்