- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilசரும நிறத்தை அதிகரிக்க உதவும் மோர்

சரும நிறத்தை அதிகரிக்க உதவும் மோர்

- Advertisement -

நிறமாக இருப்பவராக இருந்தாலும் சரி நிறம் குறைவாக இருப்பவராக இருந்தாலும் சரி தங்களுடைய நிறத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும், ஜொலிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். இதற்காக பலரும் எடுக்கக்கூடிய முயற்சிகளில் ஒன்று தான் ஃபேர்னஸ் கிரீம்களை உபயோகப்படுத்துவது. இப்படி கெமிக்கல் நிறைந்த ஃபேர்னஸ் கிரீம்களை நாம் உபயோகப்படுத்துவதால் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய இயற்கையான சத்துக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

இதனால் முகம் விரைவிலேயே முதிர்ச்சியடையக்கூடிய தன்மை ஏற்படும். இதற்கு பதிலாக இயற்கையான பொருட்களை பயன்படுத்தி நம்முடைய சரும நிறத்தை நாம் அதிகரிக்கும் பொழுது அதனால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் சரும நிறத்தை அதிகரிப்பதற்கு மோரை எப்படி பயன்படுத்துவது என்று தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

நமக்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பல பொருட்கள் எப்படி நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறதோ அதே போல் நம்முடைய சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். அப்படி நம்முடைய உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள உதவும் மோரை நம்முடைய சருமத்திற்கு நாம் பயன்படுத்தும் பொழுது நம்முடைய சருமமும் ஆரோக்கியமாக இருக்கும். அதோடு நம்முடைய சரும நிறமும் அதிகரிக்கும்.

இதற்கு ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை கப் அளவிற்கு கடலை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு கஸ்தூரி மஞ்சள் தூளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு மோரை ஊற்றி ஒரு பேஸ்ட்டாக கலந்து கொள்ளுங்கள். இதை உங்களுடைய முகம் கை, கால், உடல் என்று அனைத்திலும் தடவ வேண்டும்.

- Advertisement -

எந்த இடத்தில் எல்லாம் கருமை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் சற்று அதிகமாகவே தடவிக் கொள்ளுங்கள். இதை நன்றாக காய விடுங்கள். இது நன்றாக காய்ந்த பிறகு தண்ணீரை கைகளில் தொட்டு சருமத்தை நன்றாக மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தண்ணீரைத் தொட்டு தொட்டு நாம் மசாஜ் செய்யும் பொழுது நம் முகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான கருமைகளும் இறந்த செல்களும் வெளியேறும்.

சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. முகப்பருவால் ஏற்பட்ட வடுக்களை மறைய செய்கிறது. மேலும் முகத்தில் இருக்கக்கூடிய கருந்திட்டுகளையும், கருமைகளையும் நீக்குகிறது. இதனால் பொலிவான சருமத்தை பெற முடியும்.

- Advertisement -

இப்படி வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் உபயோகப்படுத்தினால் போதும் சருமம் நல்ல பொலிவுடன் நிறமாக மாறும். காலையில் வேலைக்கு செல்பவர்கள் இதை செய்ய முடியாது என்று நினைத்தால் இரவு படுக்க செல்வதற்கு முன் இந்த முறையை பின்பற்றலாம். இதில் கஸ்தூரி மஞ்சள் தான் சேர்க்கப்பட்டுள்ளது என்பதால் ஆண்களும் இந்த பேக்கை உபயோகப்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: கருந்திட்டுகள் மறைய உருளைக்கிழங்கு ஐஸ் கியூப்

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய சருமத்தை பொலிவுடன் நிறத்துடனும் மாற்ற முடியும். விருப்பம் இருப்பவர்கள் உபயோகித்து பாருங்கள்.

சற்று முன்