ஒருவருடைய முகத்தில் கருந்துட்டுகள் இருந்து விட்டால் அவர்களால் வெளியில் எளிதில் வர முடியாது. கருந்திட்டுகள் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் அவற்றை சரி செய்வதற்கு இயற்கையான முறையில் சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அப்படிப்பட்ட வழிமுறைகளில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் உருளைக்கிழங்கை வைத்து செய்யக்கூடிய ஒரு ஐஸ் கியூப் மசாஜ். இதை எப்படி செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
கருந்திட்டுகளை ஆங்கிலத்தில் பிக்மென்டேஷன் என்று கூறுவோம். இந்த பிக்மென்டேஷன் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சரியான உணவு பழக்கம் இல்லாதது, அதிகப்படியாக வெயிலில் அலைவது, கெமிக்கல் நிறைந்த பொருட்களை முகத்தில் அதிகமாக உபயோகப்படுத்துவது, ஹேர் டை போன்றவற்றால் பிக்மென்டேஷன் ஏற்படும்.
இந்த பிக்மென்டேஷன் ஏற்பட்டு விட்டால் முதலில் நாம் நம்முடைய முகத்திற்கு கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் அதிகப்படியான சர்க்கரை சேர்த்துக் கொள்வதும் கார்போஹைட்ரேட் உணவுகளை சேர்த்துக் கொள்வதையும் தவிர்த்து விட்டு புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் சிறப்பு. இதோடு மட்டுமல்லாமல் நம்முடைய முகத்திற்கு சில வழிமுறைகளை நாம் பின்பற்றினோம் என்றால் படிப்படியாக இந்த கருந்திட்டுகள் மறைய ஆரம்பிக்கும்.
முதலில் இதற்கு தினமும் நாம் காய்ச்சாத பசும்பாலில் முகத்தை நன்றாக தேய்த்து மசால் செய்துவிட்டு அது உணர்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். அடுத்ததாக ஒரு உருளைக்கிழங்கை எடுத்து அதை நன்றாக உரசி அதிலிருந்து சாரை பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு சிட்டிகை அதிமதுரப் பொடி, 10 சொட்டு லெமன் எசன்ஷியல் ஆயில், நான்கு டீஸ்பூன் பால் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை ஐஸ் க்யூப் ட்ரெயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும். இது ஐஸ்கியூப்பாக மாறிய பிறகு தினமும் காலையிலும் இரவு படுக்க செல்வதற்கு முன்பும் இந்த ஐஸ்கட்டியை ஒரு காட்டன் துணியில் சுற்றி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜ் செய்து முடித்த பிறகு முகத்தை கழுவ கூடாது. அதை அப்படியே விட்டு விடுங்கள். இதோடு மட்டுமல்லாமல் இரவு படுக்கச் செல்வதற்கு முன் குங்குமாதி தைலத்தை முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்துவிட்டு படுக்க வேண்டும்.
இந்த வழிமுறைகளை தொடர்ந்து 20 நாட்கள் பின்பற்றுவதோடு நாம் மேற் சொன்ன கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து முகத்தை கழுவுவதற்கு கூட பச்சை பயிறு மாவை பயன்படுத்தினால் இருபதே நாட்களில் முகத்தில் இருக்கக்கூடிய கருத்திட்டுகள் மறைவதை நம்மால் கண்கூடாக பார்க்க முடியும்.
இதையும் படிக்கலாமே: ஜப்பானிய பெண்களின் அழகு ரகசியம்
இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய இந்த அற்புதமான பொருட்களை பயன்படுத்தி நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய கருத்திட்டுகளை நீக்கி அழகான இளமையான தோற்றத்தை பெறுவோம்.