- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி அடர்த்தியாக வளர ஹேர் பேக்

முடி அடர்த்தியாக வளர ஹேர் பேக்

- Advertisement -

தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் ஆசைப்படுவோம். ஆனால் இந்த காலகட்டத்தில் பலருக்கும் முடி உதிர்தல் பிரச்சனை என்பது ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதிக அளவில் கெமிக்கல் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்துவதும் தலைமுடி வறட்சி ஏற்படுவதுமே மிக முக்கியமான காரணமாக திகழ்கிறது. இதை தவிர்த்து விட்டு உடல் உஷ்ணத்தாலோ, சத்து குறைபாட்டினாலோ முடி உதிர்தல் பிரச்சினை என்பது ஏற்படலாம். இந்த முடி உதிர்தலை பிரச்சினையை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல் உதிர்ந்த இடத்தில் முடியை வேகமாக வளர வைக்க செய்யக்கூடிய ஒரு எளிமையான ஹேர் பேக்கில் பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முடி உதிர்தல் பிரச்சனையை தீர்ப்பதற்கு நமக்கு பல இயற்கையான பொருட்கள் பயன்படுகின்றன. அந்த பொருட்களில் நம்முடைய உடல் நிலைக்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்தினோம் என்றால் கண்டிப்பான முறையில் அந்த தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது முற்றிலும் நின்றுவிடும். முதலில் தலைமுடிக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பொருளை சேர்க்க வேண்டும். அடுத்ததாக தலைமுடி உதிர்தலை நிறுத்தக்கூடிய பொருளை சேர்க்க வேண்டும். கடைசியாக தலைமுடி வளர்ச்சியை தூண்டி வைக்கும் பொருளை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

அது என்னென்ன என்று பார்ப்போமா? முதலில் தலைமுடிக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பொருளாக திகழ்வது கற்றாழை. கற்றாழை ஜெல்லில் பல அற்புதமான சத்துக்கள் இருக்கின்றன. இதை நம்முடைய தலைமுடிக்கு நாம் பயன்படுத்துவதன் மூலம் அடர்த்தியான ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும். அடுத்ததாக நம்முடைய தலைமுடி உதிர்தல் பிரச்சினையை நீக்குவதற்கு உதவக்கூடிய பொருளாக திகழ்வதுதான் கருவேப்பிலை. கருவேப்பிலையை நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுதும் சரி நம்முடைய தலைமுடிக்கு எடுத்துக் கொள்ளும் பொழுதும் தலைமுடி உதிர்தல் என்பது முற்றிலும் நின்றுவிடும். தலைமுடி கருமையாகவும் வளர ஆரம்பிக்கும்.

மூன்றாவதாக நம்முடைய தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்க கூடிய பொருளாக திகழ்வது இஞ்சி. இந்த இஞ்சியை நம்முடைய தலையில் நாம் தேய்ப்பதன் மூலம் முடி வளர்தலில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி முடி வளர்ச்சியை தூண்டி விடும். சரி இப்பொழுது ஹேர் பேக்கை பற்றி பார்ப்போமா.

- Advertisement -

நம்முடைய தலை முடியின் அளவிற்கு ஏற்றவாறு கற்றாழையை எடுத்துக் கொள்ளுங்கள். கடைகளில் வாங்க கூடிய கற்றாழையை உபயோகப்படுத்தக் கூடாது. வீட்டில் வளரக்கூடிய கற்றாழையை தான் உபயோகப்படுத்த வேண்டும். அடுத்ததாக இதில் ஒரு இன்ச் அளவிற்கு இஞ்சியை எடுத்து தோலை உரித்து நன்றாக இடித்து அதில் இருந்து சாறை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாரிலிருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அரைக்கப் கருவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் ஹார்பேக் தயாராகிவிட்டது. இதை நம்முடைய தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் ஊற வைத்து விட்டு பிறகு எப்பொழுதும் போல் தலைக்கு குளித்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: முகம் பளிச்சிட உதவும் அரிசி மாவு

அதிகமான முடி உதிர்தல் பிரச்சனை இருப்பவர்கள் இந்த முறையில் தொடர்ந்து 7 நாட்கள் உபயோகப்படுத்த வேண்டும். பிறகு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் இந்த ஹேர் பேக்கை உபயோகப்படுத்தினால் போதும்.

சற்று முன்