மண்ணை தொட்டாலும் பொன்னாக மாறும் என்று அந்த காலத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள். அது அவர்களுடைய கைராசியை பொறுத்ததாக அமைந்தாலும் அவர்கள் தொட்ட அந்த நேரத்தையும் கணக்கில் கொண்டு தான் அமைகிறது. எந்த ஒரு செயலை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த செயலை செய்வதற்குரிய நேரத்தை நம் உபயோகப்படுத்தினோம் என்றால் கண்டிப்பான முறையில் அந்த செயலில் நமக்கு வெற்றி ஏற்படும். அந்த வகையில் தங்கத்தை அதிக அளவில் சேர்ப்பதற்கு எந்த நேரத்தில் எளிமையான இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தங்கம் சேர பரிகாரம்
தங்கம் பெண்களின் கனவாகவே திகழ்கிறது. பல பெண்களுக்கு அந்த கனவு நினைவாகி விடும். சில பெண்களுக்கு அது கனவாகவே போய்விடும். ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத அளவிற்கு பலரும் இருக்கிறார்கள். கிலோ கணக்கில் தங்கத்தை வைத்துக்கொண்டு தானும் அனுபவிக்காமல் பிறரையும் அனுபவிக்க விடாமல் வைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.
தங்கத்தால் தோஷம் ஏற்பட்டு இருந்தாலும் தங்கத்தை வாங்க முடியாது. அப்படியே வாங்கினாலும் அதை சேர்த்து வைக்க முடியாது. ஒரு பொருளை நம்மிடமே வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கும் ஒரு வித வசியம் வேண்டும். அதனால் தான் மனைவியை பின்தொடரும் கணவர்களை பார்த்து வசியம் வைத்து விட்டால் உனக்கு என்று கூறுவார்கள். இந்த வசியத்தை நாம் பெரும்பாலும் பணத்தை சேர்ப்பதற்காக உபயோகப்படுத்துவோம்.
அதே போல் தான் இந்த பதிவில் தங்கத்தை சேர்ப்பதற்காக தங்க வசியம் எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். இதற்கு ஒரு பைசா கூட செலவிருக்காது. நம்மிடம் இருக்கக்கூடிய ஒரே ஒரு குண்டுமணி தங்கம் மட்டும் போதும். நம்மிடம் இருக்கக்கூடிய அந்த தங்கத்தை வைத்து தங்க வசியம் செய்யப் போகிறோம். இப்படி நாம் வசியம் செய்வதன் மூலம் பணவரவு என்பது அதிகரித்து அதன் மூலம் தங்கத்தை நம்மால் சேர்க்க முடியும்.
தெய்வ வழிபாட்டிற்கு உகந்த கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை. இந்த கிழமைகளில் நம்மிடம் இருக்கக்கூடிய தங்கத்தை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தொட வேண்டும். அதாவது தொட்டு நம்முடைய கையில் வைத்து மனதார மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தங்கவசியம் ஏற்படும். அந்த நேரத்தை தெரிந்து கொள்வோமா…
செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் சுக்கிர ஹோரை வரும். இந்த ஹோரையில் கையை சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். பிறகு கையில் ஏதாவது ஒரு வாசனை திரவியத்தை தடவிக் கொள்ளுங்கள். ஜவ்வாது, அரகஜா, பன்னீர், பச்சை கற்பூரம் போன்று ஏதாவது ஒரு வாசனை திரவியத்தை தடவிக் கொள்ளுங்கள்.
பிறகு உங்கள் கையில் வீட்டில் இருக்கக் கூடிய தங்கம் ஏதாவது ஒன்றை எடுத்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் அனைத்து தங்கத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் மல்லிகைப்பூ அல்லது துளசி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து நகையுடன் சேர்த்து கையில் வைத்துக் கொண்டு மகாலட்சுமி தாயாரை மனதார வழிபாடு செய்யுங்கள்.
இப்படி குறைந்தது இரண்டு நிமிடமாவது வழிபாடு செய்து விட்டு அந்த தங்க நகையை எப்பொழுதும் எங்கு வைப்போமோ அங்கு கொண்டு போய் வைத்து விட வேண்டும். இதே போல் வெள்ளிக்கிழமை மதியம் 1:00 மணியிலிருந்து 2:00 மணிக்குள் வரக் கூடிய சுக்கிர ஹோரையிலும் இதே முறையில் வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்து வர தங்க வசியம் ஏற்படும். தங்கம் அதிக அளவில் சேர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:
தங்கம் சேர வேண்டு என நினைப்பவர்கள் ஒரு ரூபாய் கூட செலவில்லாத எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை விருப்பம் இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளுவோம்.