- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதடைகளை உடைத்து எறியும் விநாயகர் வழிபாடு

தடைகளை உடைத்து எறியும் விநாயகர் வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் பல முயற்சிகளை நாம் எடுப்போம். அந்த முயற்சிகள் அனைத்துமே வெற்றி பெறுவது இல்லை. பல காரியங்கள் வெற்றி பெற்றாலும் சில காரியங்கள் தோல்வியே அடைகின்றன. அதிலும் குறிப்பாக வெற்றியை நெருங்கி செல்லும் நேரத்தில் தோல்வியை சந்தித்து விடும். பல கஷ்டங்களுக்குப் பிறகுதான் அந்த வெற்றியை நம்மால் காண முடியும். இப்படி பல சூழ்நிலைகளில் பலரும் மாட்டிக்கொண்டு தவிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய ஒரு எளிமையான விநாயகர் வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒரு சிலருக்கு தாங்கள் எந்த காரியத்தை செய்தாலும் அந்த காரியத்தில் தடைகள் ஏற்படும். வேலை கிடைப்பதில் தாமதம், தொழிலில் முடக்கம், படிப்பில் தடைகள், குடும்பத்தில் நிம்மதியின்மை, திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று நின்று விடுதல். இப்படி பல காரியங்கள் தடைப்பட்டு இருக்கும். இப்படிப்பட்ட தடைபட்ட காரியங்களை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு நமக்கு விநாயகப் பெருமான் துணை புரிவார்.

- Advertisement -

முழுமுதற் கடவுளாக திகழக்கூடிய விநாயகப் பெருமானை நாம் முழுமனதுடன் நம்பி தொடர்ந்து ஏழு நாட்கள் மட்டும் இந்த தீபத்தை ஏற்றி வழிபட நம் வாழ்வில் நடக்காத காரியத்தையும், தடைபட்ட காரியத்தையும் நடத்தி காட்டுவார். விநாயகர் பெருமான் இந்த தீப வழிபாட்டை நாம் திங்கட்கிழமை அன்று எமகண்ட வேளையில் ஆரம்பிக்க வேண்டும். இந்த வழிப்பாட்டிற்கு நமக்கு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் படம் தேவைப்படும். நல்ல படமாக பார்த்து ஒரு படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து மனைப் பலகையின் மீது வைத்து விடுங்கள். பிறகு விநாயகப் பெருமானுக்கு உங்களுடைய கைகளால் அருகம்புல்லை மாலையாக கட்டி போட வேண்டும். அடுத்ததாக ஏழு அகல்விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்குகளை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொண்டு அதில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி பஞ்சு திரியுடன் வெட்டி வேரையும் கலந்து அந்த எண்ணெயில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு மஞ்சள் நிற பேப்பரை எடுத்து அதில் சிவப்பு நிற பேனாவை பயன்படுத்தி உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை ஏழு முறை எழுதி விநாயகரின் பாதத்தில் வைத்து விட வேண்டும். பிறகு விநாயகப் பெருமாளுக்கு முன்பாக அமர்ந்து அவருக்குரிய விநாயக அகவலை ஏழு முறை பாராயணம் செய்ய வேண்டும். இப்படி தினமும் 7 நாட்கள் விநாயகர் பெருமானை வழிபாடு செய்ய நாம் செய்யும் காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தையும் விலக்கி வெற்றிகளை தருவார்.

இதையும் படிக்கலாமே: செல்வம் சேர சஷ்டி வழிபாடு

மிகவும் சக்தி வாய்ந்த வழிபாட்டு முறையான இந்த விநாயகர் வழிபாட்டு முறையை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும்.

சற்று முன்