நாளை 29- 5 -2024 புதன்கிழமையோடு சஷ்டி திதி சேர்ந்து வருகிறது. அன்று முருகப் பெருமானை நாம் மனதார வழிபட வேண்டும். முருகப்பெருமானுக்குரிய சில வழிமுறைகளை நாம் பின்பற்றும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும். அந்த வழிமுறைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களில் மிகவும் முக்கியமான விரோதமாக திகழ்வதுதான் சஷ்டி விரதம். கார்த்திகை மாதத்தில் வரும் சூரசம்கார சஷ்டி விரதத்தை போல மாத மாதம் வரக்கூடிய சஷ்டி திதி அன்றும் விரதம் இருக்கும் வழக்கம் இருக்கிறது. இப்படி நாம் இந்த சஷ்டி திதி அன்று விரதம் இருக்கும் பட்சத்தில் நம்முடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதல் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சஷ்டி திதி அன்று நாம் எந்த வழிமுறைகளை பின்பற்றினால் நம்முடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பு ஏற்படும் என்று தான் பார்க்க போகிறோம்.
நாளை காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு அவருக்கு முன்பாக மூன்று அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த தீபமானது கிழக்கு திசையை பார்த்தவாறு இருக்க வேண்டும்.
நாளைய தினம் முருகப் பெருமானுக்கு உகந்த பாடல்கள் மந்திரங்கள் போன்றவற்றை உச்சரிப்பது மிகவும் சிறப்புக்குரியது. அதிலும் குறிப்பாக கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும். கிழக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து கந்த சஷ்டி கவசத்தை மனதார ஒரு முறையாவது படிக்க வேண்டும். அன்றைய தினத்தில் விரதம் இருப்பவர்கள் எப்பொழுதும் போல் தங்கள் விரதத்தை மேற்கொள்ளலாம்.
வீட்டில் முருகனின் வேல் அல்லது சிலை இருக்கும் பட்சத்தில் அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக எந்த பொருளை வைத்து நீங்கள் அபிஷேகம் செய்கிறீர்களோ இல்லையோ தேனை மட்டும் வைத்தாவது அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த அபிஷேகத்தை காலையில் அல்லது மாலையில் செய்யலாம். இதோடு மட்டுமல்லாமல் தங்களால் இயன்ற அளவு பிறருக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.
அதேபோல் முருகப்பெருமானை வழிபடும் பொழுது முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான நெய்வேத்தியமான பாசி பருப்பு பாயாசம், சர்க்கரை பொங்கல், திணை மாவு, தேன் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடலாம். இந்த வழிமுறைகள் அனைத்தையும் நாளை பின்பற்றினால் கோடீஸ்வர யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இவை அனைத்தையும் பின்பற்ற இயலாதவர்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது பின்பற்றி முருகப்பெருமானை வழிபட வாழ்க்கையில் இருக்கக்கூடிய பண பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும்.
இதையும் படிக்கலாமே: காத்து கருப்பு நெருங்காமல் இருக்க நிலை வாசலில் வைக்க வேண்டிய பொருள்.
மிகவும் எளிமையான இந்த முருகர் வழிபாட்டை முழுமனதோடும், நம்பிக்கையோடும் வழிபடுபவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் பணரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு உயரும்.