- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilகண் கருவளையம் நீங்க கிரீம்

கண் கருவளையம் நீங்க கிரீம்

- Advertisement -

முகத்தை புத்துணர்ச்சியாக காட்டுவதற்கு கண்கள் உறுதுணையாக திகழ்கின்றன. கண்களில் சோர்வு ஏற்பட்டால் அந்த முகமே சோர்வாக தான் திகழும். அப்படிப்பட்ட கண்களில் ஏற்படக்கூடிய மிக முக்கியமான பிரச்சினையாக கருதப்படும் கருவளையத்தை எப்படி வீட்டிலேயே கிரீம் தயார் செய்து சரி செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

கண் கருவளையம் என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை தான். சரியாக உறக்கமின்மையாலும், கண்களுக்கு சோர்வு ஏற்பட்டாலும், அதிக அளவில் மொபைல், லேப்டாப், டிவி போன்றவற்றை பார்ப்பதாலும், கண் கருவளையம் என்பது ஏற்படும். இதை தவிர்த்து ஒரு சிலருக்கு நோய்வாய் படுவதாலும் கண் கருவளையம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த கண்கருவளையம் ஏற்பட்டுவிட்டது என்றால் அவர்களைப் பார்க்கும்பொழுது எந்தவித புத்துணர்ச்சியும் இல்லாமல் சோர்வாக தெரியும்.

- Advertisement -

ஏன் நன்றாக உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களுக்கு கூட இந்த கண் கருவளையம் வந்துவிட்டால் நோய்வாய் பட்டவர்கள் போல் தோற்றமளிப்பார்கள். அதனால் இந்த கன் கருவளையம் வராமல் தடுப்பது நல்லது. இந்த கருவளையம் வந்துவிட்டால் அதை நீக்குவதற்கு உபயோகப்படுத்தக்கூடிய ஒரு க்ரீமை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

இந்த கிரீமை நாம் தயார் செய்வதற்கு ஒரு நடுத்தரமான உருளைக்கிழங்கு வேண்டும். இந்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு கேரட் உரசுவது போல் உரசி அதிலிருந்து சாரை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த உருளைக்கிழங்கு இயற்கையிலேயே பிளீச்சிங் ஏஜென்ட் கொண்டதாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

- Advertisement -

இப்பொழுது இந்த உருளைக்கிழங்கு சாறுடன் பாதாம் பொடி ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்க வேண்டும். பாதாமில் அதிகளவு விட்டமின் இ சத்து நிறைந்திருப்பதால் இது சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. கருமையை நீக்குகிறது. அடுத்ததாக நாம் இதனுடன் சேர்க்கக்கூடிய பொருள்தான் கற்றாழை ஜெல். கற்றாழை ஜெல் 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் இது ஒரு கிரீம் பதத்திற்கு வரும் வரை கலந்து கொள்ள வேண்டும்.

கற்றாழை ஜெல்லை நாம் இதில் சேர்ப்பதன் மூலம் நம்முடைய கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை நீக்குவதோடு வயதானவர்களுக்கு கண்களுக்கு கீழே ஏற்படக்கூடிய வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் ஆண்டி இன்ஃப்ளமேசன் இருப்பதால் கண்களில் ஏற்படக்கூடிய சுருக்கத்தையும் போக்க உதவுகிறது. இப்பொழுது கிரீன் தயாராகிவிட்டது.

- Advertisement -

இந்த கிரீமை நாம் இரவு படுக்க செல்வதற்கு முன் நம் கண்களை சுற்றி தடவிக் கொண்டு படுத்து உறங்க வேண்டும். காலையில் எழுந்து முகத்தை கழுவிக் கொள்ளலாம். இப்படி ஒரு வாரம் செய்தாலே நல்ல பலனை நம்மால் பார்க்க முடியும். கண்கள் இளமையுடனும், புத்துணர்ச்சியுடன் திகழும். அதனால் நம்முடைய முகமே புத்துணர்ச்சியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பொலிவான இளமையான முகத்தை பெற ஃபேஸ் பேக்

ஆரோக்கியமான சத்து மிகுந்த பொருட்களை பயன்படுத்தி இப்படி நாம் க்ரீம் செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நம் கண்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

சற்று முன்