கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்களுக்கு இந்த மைத்ரேய முகூர்த்த நேரம் என்பது ஒரு வரம். மாதத்தில் ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இந்த மைத்ரேய முகூர்த்த நேரம் என்பது வரும். சித்தர்களால் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், நாம் வாங்கிய கடன் தொகையிலிருந்து, ஒரு சிறு தொகையை திருப்பிக் கொடுத்து விட்டால் போதும்.
அந்த கடன் பிரச்சனையில் இருந்து முழுமையாக சீக்கிரம் விடுபடலாம் என்பது நம்பிக்கை. அந்த வகையில் இந்த ஜூன் மாதத்திற்கான மைத்ரேய முகூர்த்த நாட்கள் எப்போது வருகிறது, எந்த நேரத்தில் கடனை திருப்பி கொடுப்பது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
ஜூன் 2024 மைத்ரேய முகூர்த்த தேதிகள்
ஜூன் 3 ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் 1:30 – 3:00 மணி வரை மைத்ரேய முகூர்த்த நேரம் இருக்கிறது. ஜூன் 19 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6:30 – 7:30 மணி வரை மைத்ரேய முகூர்த்த நேரம். ஜூன் 20 வியாழக்கிழமை காலை 9:00 – 10:00 மணி வரை மைத்ரேய முகூர்த்த நேரம். ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:00 – 4:30 மணி வரை மைத்ரேய முகூர்த்த நேரம்.
இந்த நாட்களையும் நேரத்தையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்டுள்ள இந்த நாளில் இந்த நேரத்தில் நீங்கள் யாரிடம் கைநீட்டி கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அந்த நபருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை திருப்பித் தர வேண்டும்.
உதாரணத்திற்கு 1,00,000 ரூபாய் கடன் இருக்கிறது என்றால், இந்த குறிப்பிட்ட நேரத்தில் 1000 ரூபாய் கடனை திருப்பிக் கொடுத்தாலும் நீங்கள் வாங்கிய 1,00,000 ரூபாய் கடன் சீக்கிரம் அலையும் என்பதுதான் நம்பிக்கை. ஆனால் 1,00,000 ரூபாய் கடனுக்கு 1000 ரூபாயை திருப்பிக் கொடுத்தால் யாரும் வாங்க மாட்டாங்க. அதனால் ஒரு வெள்ளை கவர் எடுத்துக்கோங்க.
அந்த கவரின் மேல் நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அவர்களுடைய பெயரை எழுதுங்கள். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மைத்திரேய முகூர்த்த நேரத்தில் அந்த கவருக்குள் 1000 ரூபாயை வைத்து விடுங்கள். இப்போது நீங்கள் இந்த குறிப்பிட்ட மைத்திரேயை முகூர்த்த நேரத்தில் கடனை திருப்பிக் கொடுத்ததாக அர்த்தமாகிவிடும்.
இந்த கவரை ஏதாவது ஒரு அலமாரியில் பத்திரப்படுத்தி வைத்துவிடுங்கள். சீக்கிரம் உங்கள் கையில் 1 லட்ச ரூபாய் சேர்ந்து விடும். அந்த பணத்தோடு நீங்கள் கவரில் போட்டு வைத்திருக்கும் பணத்தையும் சேர்த்து கடன் காரர்களுக்கு திருப்பி கொடுத்து விடலாம். இவ்வளவுதான் பரிகாரம்.
இதோட சேர்த்து இந்த மையித்ரேய முகூர்த்த நேரத்தில் ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளவும். அதன் மேல் என்னுடைய 1 லட்ச ரூபாய் கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்று எழுதி, அந்த பிரியாணி இலையை நெருப்பில் பொசுக்கி விட்டால் போதும். உங்கள் கடன் சீக்கிரம் அடையும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர கொப்பரை தேங்காய் பரிகாரம்
இந்த பிரியாணி இலையே நெருப்பில் பொசுக்கக் கூடிய நேரமும் இந்த மைத்ரேய முகூர்த்த நேரமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த தகவலை பின்பற்றி பாருங்கள். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் உங்கள் கடன் சுமை குறையும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.