- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர கொப்பரை தேங்காய் பரிகாரம்

கடன் தீர கொப்பரை தேங்காய் பரிகாரம்

- Advertisement -

கடன் இல்லாமல் இருப்பவர்கள் தான் நிம்மதியாக வாழ்க்கையை வாழ முடியும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் எதற்கெடுத்தாலும் கடன் வாங்க வேண்டிய நிலை உண்டாக்கி விட்டது. அதனால் கடனால் கஷ்டப்படுபவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். தங்களால் திருப்பித் தர இயன்ற அளவு கடனை வாங்கி அதை சமாளித்து விடுவது தான் இன்றைய காலத்தில் நிம்மதியை தருகிறது. ஆனால் கடனை வாங்கிவிட்டு அந்த கடனை திருப்ப அடைப்பதற்கு மேலும் கடனை வாங்கிக் கொண்டு இருக்கும் சூழ்நிலைதான் பலருக்கும் ஏற்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கும் கடன் சுமையை குறைப்பதற்கும் கொப்பரை தேங்காயை வைத்து எப்படி பரிகாரம் செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் தீர சனிக்கிழைமை பரிஹாரம்

தெய்வீகதுவம் நிறைந்ததாக திகழக்கூடியது தான் தேங்காய். இந்த தேங்காயை அனைத்து தெய்வ வழிபாட்டிலும் பயன்படுத்துவோம். தெய்வத்திற்கு நிவேதனம் செய்வதற்கு தேங்காய் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக திகழ்கிறது. இதோடு மட்டுமல்லாமல் எந்த தெய்வத்திற்கு நாம் யாகம் செய்தாலும் அந்த யாகத்தில் தேங்காயின் காய்ந்த நிலையாக கூறக்கூடிய கொப்பரை தேங்காயை அக்னியில் போட்டு தெய்வத்திற்கு சமர்ப்பணம் செய்வோம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கொப்பரை தேங்காயை கடன் தீர எப்படி உபயோகப்படுத்துவது என்று தெரிந்து கொள்வோமா?

- Advertisement -

இந்த பரிகாரத்தை அமாவாசை முடிந்து வரும் முதல் சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று சனிக்கிழமை செய்ய வேண்டும். காலை 9 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து முடித்து விட வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கொப்பரை தேங்காய் வேண்டும். அடுத்ததாக எள், சர்க்கரை வேண்டும். கொப்பரை தேங்காயை வாங்கி வந்து அதன் மேலே சிறிய ஓட்டை போல போட்டுக்கொண்டு அதற்குள் பாதி அளவு கருப்பு எள்ளையும், பாதி அளவு சர்க்கரையும் சேர்த்து அந்த கொப்பரை தேங்காய் முழுவதும் நிரப்பிவிட வேண்டும்.

பிறகு அதை மூடி விட வேண்டும். இப்பொழுது அருகில் இருக்கும் அரச மரத்தடிக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று அரச மரத்தடியில் ஒரு சிறிய பள்ளத்தை தோண்டி அதற்குள் இந்த கொப்பரை தேங்காயை வைத்து மூடிவிட வேண்டும். பிறகு அதற்கு மேல் ஒரு அகல் விளக்கை வைக்க வேண்டும். அந்த அகல் விளக்கில் கடுகு எண்ணெயை ஊற்றி இரண்டு பஞ்சு திரிகளை ஒன்றாக இணைத்து ஒரு திரியாக்கி அதை அந்த எண்ணெயில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து சனி சாலிமா மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். ஒரு முறை மட்டும் பாராயணம் செய்தால் போதும். பிறகு வீட்டிற்கு திரும்பி விடலாம். இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது உணவுகள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு உணவு எடுத்துக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பித்த நாளிலிருந்து தினமும் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்யும் பொழுது சனி சாலிமா மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

இதே போல் அடுத்த வாரமும் இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். அப்பொழுது அதே இடத்தை பயன்படுத்தாமல் வேறு இடத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம். தீபத்தை மட்டும் கிழக்கு நோக்கி தான் ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற வேண்டுதல் சீட்டு பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் சனி பகவானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இதனால் கடன் சுமை குறைய ஆரம்பிக்கும். நம்பிக்கை இருப்பவர்கள் முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.

சற்று முன்