- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்தேங்காய் ரவா லட்டு செய்முறை

தேங்காய் ரவா லட்டு செய்முறை

- Advertisement -

வீட்டில் விசேஷம் என்றதும் ஏதாவது ஒரு இனிப்பு பொருளை செய்து வீட்டில் இருக்கும் அனைவரும் உண்டு மகிழ்வார்கள், இன்னும் சிலரோ ஒரு படி மேலே சென்று தங்களை சுற்றி இருக்கக்கூடிய அக்கம் பக்கத்து வீட்டினருக்கும் இந்த இனிப்பை கொடுத்து தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள். அப்படி செய்யக்கூடிய இனிப்பு பொருட்களில் மிகவும் பிரபலமாக திகழக்கூடியது ரவையை வைத்து செய்யக்கூடிய கேசரிதான்.

இது அனைவரின் இல்லங்களிலும் செய்யக்கூடிய ஒன்றாக தான் திகழ்கிறது. இதே ரவையை வைத்து இதனுடன் தேங்காயையும் சேர்த்து நினைக்கும் பொழுதே நாவில் எச்சில் ஊரும் அளவிற்கு சுவையான தேங்காய் ரவா லட்டுவை செய்து கொடுத்தோம் என்றால் சாப்பிட்டவர்கள் அனைவரின் நாவிலும் அதன் சுவை அப்படியே ஒட்டிக்கொண்டு இருக்கும். அப்படிப்பட்ட தேங்காய் ரவா லட்டுவை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • ரவை – ஒரு கப்
  • காய்ச்சிய பால் – ஒரு கப்
  • தேங்காய் துருவல் – 1/2 கப்
  • சர்க்கரை – 1/2 கப்
  • முந்திரி – தேவையான அளவு
  • நெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ரவையை சேர்த்து காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலையும் அதில் ஊற்றி நன்றாக கலந்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி நெய் உருகியதும் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.

தேங்காய் நன்றாக வறுபட்ட பிறகு அதை எடுத்து ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளுங்கள். மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து மீதம் இருக்கும் நெய் அனைத்தையும் ஊற்றி நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் முந்திரி பருப்பையும் சேர்த்து பொன்னிறமாக சிவக்க வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 20 நிமிடம் ரவை ஊறிய பிறகு மீதம் இருக்கும் நெய்யில் அந்த ரவையை சேர்த்து தண்ணீர் பதம் கொஞ்சம் கூட இல்லாமல் பொடியாக வரும் அளவிற்கு கட்டிகளை உதிர்த்துவிட்டு நன்றாக கிளற வேண்டும். ரவை அனைத்தும் உதிர்ந்து வந்த பிறகு அதை அப்படியே தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கை பொறுக்கும் அளவிற்கு சூடு வந்த பிறகு அதில் வறுத்து வைத்திருக்கும் தேங்காய், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள், பொடித்து வைத்திருக்கும் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக கலந்து விட வேண்டும். இதன் சூட்டில் சர்க்கரை இளக ஆரம்பிக்கும். அப்பொழுது நாம் அப்படியே உருண்டையாக பிடித்து எடுத்து வைத்துக் கொள்ளலாம். சுவையான தேங்காய் ரவா லட்டு தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: செட்டிநாடு ரங்கூன் புட்டு செய்முறை

ஒருமுறை இந்த தேங்காய் ரவா லட்டுவை செய்துவிட்டால் எப்பொழுது இனிப்பு செய்யப் போகிறீர்கள் என்று சொன்னாலும் வீட்டில் இருக்கும் அனைவரும் இந்த லட்டுவை தான் கேட்பார்கள்.

சற்று முன்