- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 30 அக்டோபர் 2026

இன்றைய ராசிபலன் – 30 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று நிதானதோடு இருக்க வேண்டும். யாரிடமும் வம்பு வழக்குகளுக்கு செல்லக்கூடாது. தேவையில்லாத பகையால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது நல்லது. உங்களுடைய கௌரவத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக, எந்த பெரிய செலவையும் செய்யக்கூடாது. இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் குழப்பத்திற்கு ஒரு விடை கிடைக்கும். மன சஞ்சலம் நீங்கும். கடன் சுமையிலிருந்து விடுபட்டு இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்க கொஞ்சம் வாய்ப்பு இருக்கு. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. முன்பின் தெரியாத நபருக்கு கடன் கொடுக்க வேண்டாம். மலிவாக கிடைக்கும் பொருட்களை வாங்கி ஏமாறவும் வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் நிதானத்தோடு சிந்தித்து செயல்படுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். சுறுசுறுப்பு இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். சுப செலவுகள் ஏற்படும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நீண்ட தூர பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்க். வீண் விரைய செலவுகள் குறையும். சேமிப்பு உயர்வதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் தரும் நாளாகவும் அமையும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கு. வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள், உடலுக்கு ஆரோக்கியம் தராத பொருட்களை சாப்பிட வேண்டாம். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சுமூகமாக செல்லும். சுபசலவர்கள் ஏற்படும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, பிரிந்த உறவுகளோடு ஒன்று சேரவும் வாய்ப்பு உள்ளது.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். புதிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது அனுபவங்கள் கிடைக்கும். புது மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு அமைதியை தரும். வீட்டில் தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகள் ஏற்படும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். இதுநாள் வரை நஷ்டமாக இருந்த விஷயங்கள் இன்று லாபமாக மாறும். நீண்ட நாள் செய்யாமல் விட்டு வைத்திருந்த வேலையை இன்று கையில் எடுங்கள். வெற்றி உங்களுக்கே.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல ஆக்கபூர்வமான விஷயங்களை செய்வீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். வியாபாரத்தில் கொஞ்சம் நிதானம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அகல கால் வைக்க வேண்டாம். பண விஷயத்தில் அனுபவசாலிகளின் பேச்சை கேட்பது நல்லது.

சற்று முன்