- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபதினாறு செல்வங்களையும் பெற வெந்தய பரிகாரம்

பதினாறு செல்வங்களையும் பெற வெந்தய பரிகாரம்

- Advertisement -

நாளை 05-06-2024 புதன்கிழமை கார்த்திகை நட்சத்திரம் வருகிறது. இந்த கார்த்திகை நட்சத்திரம் என்பது முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக திகழ்கிறது. புதன்கிழமையோடு சேர்ந்து வரும் இந்த கார்த்திகை நட்சத்திரத்தை நாம் தவறவிடாமல் முருகப் பெருமானை வழிபட்டோம் என்றால் முருகப்பெருமானின் அருளோடு புதன் பகவானின் அருளும் நமக்கு கிடைத்து அதனால் கல்வியிலும் செல்வத்திலும் சிறந்து விளங்க முடியும். அன்றைய தினம் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முருகர் வழிபாடு

செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பணம் ஒன்று இருந்தால் மட்டும் பத்தாது. பணம் ஒரு வகையான செல்வம் தான். மீதம் இருக்கும் 15 செல்வங்களும் கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களால் நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ முடியும். இப்படி 16 செல்வங்களையும் ஒருசேர பெறுவதற்கு முருகப்பெருமானை நாம் மிகவும் எளிமையான முறையில் வழிபடலாம். அதுவும் முருகப்பெருமானுக்குரிய கார்த்திகை நட்சத்திர நாளன்று புதன் பகவானுக்குரிய வெந்தயத்தை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்தால் அனைத்து விதமான செல்வங்களையும் நம்மால் பெற முடியும்.

- Advertisement -

மாதத்திற்கு ஒருமுறை வரக்கூடிய கார்த்திகை நட்சத்திர நாளன்று முருகப் பெருமானை மனதார நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். முழு உபவாசம் இருந்து கார்த்திகை நட்சத்திரத்தன்று மாலை நேரத்தில் முருகப்பெருமானின் அபிஷேக ஆராதனைகளை பார்த்துவிட்டு விரதத்தை விட வேண்டும். ஆனால் பலருக்கும் உடல் நலம் காரணமாக இவ்வாறு இருக்க இயலாது அப்படிப்பட்டவர்கள் அவர்களால் இயன்ற அளவு விரத முறையை கடைப்பிடித்து முருகப்பெருமானை வழிபடலாம்.

புதன்கிழமை அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு முருகப் பெருமானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்து மஞ்சள் நிற மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். பிறகு அவருக்கு உகந்த பாடல்களை பாராயணம் செய்து கொள்ளுங்கள். இயன்றவர்கள் அன்றைய தினம் முருகப் பெருமானின் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.

- Advertisement -

மாலை நேரத்தில் வீட்டில் முருகப்பெருமானின் சிலைகோ அல்லது வேலிற்கோ தங்களால் இயன்ற அபிஷேகங்களை செய்து மலர்களால் அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்து முடித்துவிட்டு முருகப் பெருமானுக்கு முன்பாக நட்சத்திர கோலம் போட்டு அதில் ஆறு விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தீபம் ஏற்றி முடித்த பிறகு ஒரு பச்சை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை போட்டு அதை ஒரு மூட்டையாக கட்டி உங்களுடைய கையில் வைத்துக்கொண்டு 16 செல்வங்களும் பெற்று நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்று முருகப்பெருமானை மனதார வழிபாடு செய்துவிட்டு அந்த வெந்தயம் முடிச்சை முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து விடுங்கள். முருகப் பெருமானுக்கு பாசிப்பருப்பை வைத்து ஏதாவது ஒரு நெய்வேத்தியம் செய்து வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

அன்று இரவு முழுவதும் இந்த வெந்தய மூட்டை அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு இந்த மூட்டை எடுத்து பணம் சேர்த்து வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மாதத்திற்கு ஒரு முறை இந்த வெந்தயத்தை மாற்றினால் போதும். மாதத்தின் முதல் புதன் கிழமை என்பதால் அடுத்த மாதம் வரக்கூடிய முதல் புதன்கிழமை அன்று இந்த மூட்டையை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். இதில் இருக்கும் வெந்தயத்தை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அந்த துணியையே மறுபடியும் சுத்தம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர கொள்ளு பரிகாரம்

இந்த முறையில் நீங்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்து விட்டு இந்த வெந்தய பரிகாரத்தை செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருளால் உங்களுக்கு ஞானமும் செல்வமும் கிடைக்க பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். 16 செல்வங்களையும் நிறைவாக பெற்று நலமுடன் வாழலாம்பதினாறு செல்வங்களையும் பெற வெந்தய பரிகாரம்

சற்று முன்