- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவைகாசி அமாவாசை உப்பு பரிகாரம்

வைகாசி அமாவாசை உப்பு பரிகாரம்

- Advertisement -

நாளைய தினம் வைகாசி மாதம் அமாவாசை தினம். அதுவும் வியாழக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. இந்த தினத்தில் நாம் மேற்கொள்ளக்கூடிய பரிகாரங்கள் பல அற்புதமான பலனை தரக்கூடியதாக திகழும். அந்த வகையில் பணம் சேருவதற்கு உப்பை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக அமாவாசை தினங்களில் செய்யக்கூடிய பரிகாரங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு பலன் அதிகம் என்று கூறப்படுகிறது. அதுவும் குறிப்பாக குரு பகவானுக்குரிய தினமாக திகழக்கூடிய வியாழக்கிழமை அன்று அமாவாசை வருவதன் மூலம் பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

- Advertisement -

வைகாசி அமாவாசை உப்பு பரிகாரம்

இந்த பரிகாரத்தை காலை பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யலாம். அப்படி இல்லாத பட்சத்தில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளோ 10:30 மணியிலிருந்து 12 மணிக்குள்ளோ மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள்ளோ இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய பட்டுத்துணி அல்லது காட்டன் துணி தேவைப்படும். மஞ்சள் நிற துணி இல்லாத பட்சத்தில் வெள்ளை நிற துணியை எடுத்து சுத்தம் செய்து மஞ்சளை நன்றாக தடவி அடர் மஞ்சள் நிறத்தில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இதில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை போட்டுக் கொள்ள வேண்டும். பிறகு இதில் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தை போட்டு இதனுடன் 5 மிளகு, சிறிது பச்சை கற்பூரம், தங்களிடம் தங்கம் இருக்கும் பட்சத்தில் ஒரு குண்டுமணி அளவாவது தங்கம் இவை அனைத்தையும் போட்டு ஒரு மூட்டையாக கட்டி வீட்டு பூஜை அறையில் வைத்து மனதார வழிபாடு செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

வழிபாடு செய்து முடித்த பிறகு இந்த மூட்டையை எடுத்துக் கொண்டு போய் நிலை வாசலின் வெளிப்புறத்தில் கட்டி விட வேண்டும். பிறகு சாம்பிராணி தூபம் காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இந்த கல்லுப்பு பரிகாரத்தை தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும் செய்யலாம். சொந்தமாகவோ அல்லது வாடகைக்கு வாகனங்களை ஓட்டுபவர்களாக இருந்தாலும் அந்த வாகனங்களில் இந்த பரிகாரத்தை செய்து கட்டிவிடலாம்.

இப்படி செய்வதன் மூலம் பணவரவை அதிகரிப்பதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மேலும் எந்தெந்த வழிகளில் எல்லாம் நமக்கு பணவரவு தடைப்பட்டு இருக்கிறதோ அவை அனைத்தும் விலகி பணவரவு அதிகரிக்கும். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் வரும் பொழுது இந்த மூட்டையை மாற்றி புதிதாக வைக்க வேண்டும். இதில் இருக்கக்கூடிய உப்பை சுத்தமான தண்ணீரில் போட்டு கரைத்து கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

துணியை சுத்தம் செய்து மறுபடியும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதில் இருக்கும் நாணயத்தையும் தங்கத்தையும் சுத்தம் செய்யாமல் அப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: கொத்தோடு பிரச்சனைகள் தீர கொத்தவரங்காய் பரிகாரம்

இந்த பரிகாரத்தில் முழு நம்பிக்கை இருப்பவர்கள் தங்களுடைய குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு அமாவாசை தினத்தில் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் தங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பணத்தடைகளும் விலகி பணவரவை அதிகரித்து நிம்மதியான மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.

சற்று முன்