பெருமாள் என்றாலே பணம் தான். பணம் என்றாலே பெருமாள் தான். காரணம் மகாலட்சுமி பெருமாளின் மார்பில் வாசம் செய்கின்றாள். கணவன்மார்களுக்கு இந்த இடத்தில் ஒரு அறிய தகவல். எந்த கணவன்மார்கள் எல்லாம் தங்களுடைய மனைவியை மனசோடு வைத்துக்கொண்டு, ஆரவாரத்துடன் புகழ்ந்து, மனைவியுடன் சந்தோஷமாக வாழ்கின்றார்களோ, மனைவி இல்லை என்றால் நாங்கள் இல்லை என்ற முடிவுக்கு வருகிறீர்களோ, அவர்கள் கையில் எல்லாம் பணம் தங்கும்.
இப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்ட கணவன்மார்கள் எல்லாம் செல்வ வளத்தில் உயர்ந்து நிற்பார்கள். இது விளையாட்டுக்காக சொல்லக்கூடிய விஷயம் அல்ல. நிறைய வீடுகளில் பாருங்கள். மனைவியை மதித்து, மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வீடுகளில் வறுமையே இருக்காது. பணம் காசு செல்வ வளம் வந்து கொண்டே இருக்கும். நிதர்சனமான இந்த உண்மையோடு இந்த பதிவிற்குள் பயணம் செய்வோமா.
பணம் தரும் பெருமாள் வழிபாடு
உங்கள் வீட்டு பூஜை அறையில் பெருமாளின் திருவுருவப்படம் இருந்தால் அது அப்படியே இருக்கட்டும். கொஞ்சம் பெரிய அளவில் ஆடை அலங்காரத்தோடு ஜொலிக்க கூடிய இன்னொரு பெருமாளது திருவருவப்படத்தை வாங்கி நிலை வாசலுக்கு உள்பக்கமாக மாட்டி வையுங்கள். அதாவது வெளியில் இருந்து நீங்கள் நிலை வாசல் கதவை திறந்த உடன், உங்கள் கண்களில் எதிரே பெருமாள் பிரகாசமாக தெரிய வேண்டும்.
பெருமாள் படத்தை வீட்டில் இப்படி வைத்தால் உங்களுக்கு மட்டும் பணவரவு கிடைக்காது. உங்கள் வீட்டிற்குள் யாரெல்லாம் வருகிறார்களோ, யாரெல்லாம் இந்த பெருமாளை பார்த்து தரிசனம் செய்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் பணம் கிடைக்கும். அந்த பெருமாளின் திருவுருவப் படத்தில் பெருமாளுடைய தாடை பக்கத்தில் ஒரு பச்சை கற்பூரத்தை ஒட்டி வைக்க வேண்டும்.
கொஞ்சம் சந்தனம் வைத்து, அந்த சந்தனம் ஈரமாக இருக்கும் போது, பச்சை கற்பூரத்தை ஒட்டி வைத்தால் அப்படியே நின்று கொள்ளும். நெற்றியில் நாமம் போட்டிருக்கும் இடத்தில் ஒரு பச்சை கற்பூரத்தை ஒட்டி இருக்க வேண்டும். இந்த படம் நிலை வாசலுக்குள் பணத்தை அப்படியே ஈர்த்து உங்கள் கையில் கொண்டு வந்து கொடுத்து விடும்.
இதில் இன்னும் ஒரு சூட்சும ரகசியமும் இருக்கிறது. காலையில் நிலை வாசல் கதவை திறந்து, வாசல் கூட்டி கோலம் போடுவீர்கள். சில பேர் வீட்டு வாசலில் விளக்கு கூட ஏற்றுவீர்கள். அந்த சமயம் மகாலட்சுமி வருகை தருவார்கள் அல்லவா. மகாலட்சுமி உங்கள் வீட்டில் நுழையும் போதே, பெருமாளை பார்த்தால் போதும்.
இதையும் படிக்கலாமே: பணம் சேர பணப்பெட்டி ரகசியம்
அப்படியே மனம் மயங்கி வந்து உங்கள் வீட்டிற்குள் குடியேறி விடுவாள். தினமும் இந்த பெருமாளுக்கு துளசி இலைகளை சாத்துங்கள். பெருமாளை வணங்கி விட்டு, வீட்டிலிருந்து தொழில் செய்யும் இடத்துக்கு கிளம்புங்கள். வேலைக்கு கிளம்புங்கள் உங்களுக்கு பணம் தானாக வந்து குவியும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.