பூஜை செய்ய விருப்பமில்லாதவர்கள் கூட வெள்ளிக்கிழமையானால் வீட்டை துடைத்து பூஜை அறையை சுத்தம் செய்து தீபமேற்றி சாம்பிராணி தூபம் போடுவார்கள். வெள்ளிக்கிழமை சாம்பிராணி தூபம் போடாத வீடுகளே இருக்காது என்று தான் கூற வேண்டும். சாம்பிராணி தூபத்திற்கு எதிர்மறை ஆற்றல்களை விரட்டக்கூடிய தன்மைகள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சாம்பிராணி தூபத்தை எந்தெந்த கிழமையில் போடுவதன் மூலம் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு ரீதியாக சாம்பிராணி தூபம் போடுவோம். ஒரு சிலர் வெறும் சாம்பிராணியை மட்டும் போடுவார்கள். இன்னும் சிலரோ அதில் வெண்கடுகை சேர்த்து போடுவார்கள். இன்னும் சிலரோ அதில் சில மூலிகை பொருட்களை சேர்த்து தூபம் போடுவார்கள். இப்படி ஒவ்வொரு பொருளையும் நாம் தூபமாக போடும் பொழுது அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும்.
ஒரு சிலருக்கு பரிகாரம் ரீதியாகவும் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை ரீதியாகவும் தூபங்களை போடுவார்கள். இப்படி தூபத்தை போடும்பொழுது நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த கிழமையில் நாம் தூபம் போடுகிறோம் என்பதுதான். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பலன் இருக்கிறது என்பது போல ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு விதமான பலன் இருக்கும்.
சாதாரணமாக எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் இருக்கக்கூடியவர்கள் எந்தவித மூலிகை பொருட்களையும் சாம்பிராணியில் கலக்காமல் வெறும் சாம்பிராணியை மட்டும் போட்டு தூபம் காட்டுவது மிகவும் சிறப்பு. ஒரு சிலருக்கு இந்த பிரச்சினைகள் இருக்கிறது. அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால் அந்த பிரச்சினைக்குரிய பொருட்களை தூபமாக போட வேண்டும். சரி இப்பொழுது எந்தெந்த கிழமை தூபம் போட்டால் என்ன என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்று தெரிந்து கொள்வோம்.
ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் சாம்பிராணி தூபம் போடும் பொழுது நமக்கு செல்வாக்கு உயரும், புகழ் பெருகும். திங்கட்கிழமை சாம்பிராணி தூபம் போட்டு வழிபடுவதன் மூலம் மன அமைதி, மன நிம்மதி கிடைக்கும். மேலும் உடல் ஆரோக்கியம் மேம்படும். செவ்வாய்க்கிழமை தூபம் போட்டு வழிபடுவதன் மூலம் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும், கடன் ரீதியான பிரச்சினைகள் குறையும்.
புதன்கிழமை தூபம் போட்டு வழிபாடு செய்வதன் மூலம் நம்பிக்கை துரோகம் எதுவும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும், மேலும் தொழிலில் வெற்றி ஏற்படும். வியாழக்கிழமை தூபம் போட்டு வழிபடுவதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் மகான்கள், சித்தர்கள் போன்றோர்களை வழிபடுபவர்கள் கண்டிப்பான முறையில் வியாழக்கிழமை தூபம் போட வேண்டும்.
வெள்ளிக்கிழமை தூபம் போடுவதன் மூலம் லட்சுமி கடாட்சம் ஏற்படும். பண வருவாயில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் உயரும். சனிக்கிழமை தூபம் போடுவதன் மூலம் நம் உடலில் இருக்கக்கூடிய மந்தம் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். எடுத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்போம். இதில் சாம்பிராணி தூபம் என்பது கம்ப்யூட்டர் சாம்பிராணி கிடையாது. கங்கு வைத்து அதில் சாம்பிராணி தூளை போட்டு வீடு முழுவதும் காட்டுவது தான் சாம்பிராணி தூபம் என்று பொருள்படும்.
இதையும் படிக்கலாமே: சிக்கல் தீர வராகி பரிகாரம்
இந்த பதிவில் நம்பிக்கை இருப்பவர்கள் முழு மனதுடன் வீட்டில் பூஜை செய்யும் பொழுது சாம்பிராணி தூபம் காட்டி விரும்பிய பலனை பெறலாம்.