- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ மழை பொழிய மந்திரம்

செல்வ மழை பொழிய மந்திரம்

- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றால் பூஜை அறையை சுத்தம் செய்து, என்னதான் வாசம் நிறைந்த பூக்களை போட்டு, வாசம் நிறைந்த சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தாலும், அந்த பூஜை முழுமையாக நிறைவடைவதற்கு மந்திர உச்சாடனம் கட்டாயம் தேவை. ஒரு வரி மந்திரமாக இருந்தாலும் அது, சக்தி வாய்ந்த மந்திரமாக இருக்க வேண்டும்.

அப்படியே மகாலட்சுமி கடாட்சத்தை ஈர்த்துக் கொண்டு வந்து நம் வீட்டில் குடி வைக்க வேண்டும். அப்படி ஒரு சக்தி வாய்ந்த, ஒரு வரி மந்திரத்தை பற்றியும், அதை பெண்கள் எப்படி உச்சரித்து, வெள்ளிக்கிழமை பூஜை செய்ய வேண்டும் என்பதை பற்றியும் இந்த ஆன்மீகம் பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை இந்த மந்திரத்தை வீட்டில் இருக்கும் பெண்கள் உச்சரித்து பூஜை செய்தால், உங்கள் கணவருக்கு கோடி கோடியாக பணம் கொட்டும். பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். நல்ல வேலைக்கு செல்வார்கள். வீட்டில் இருக்கும் அம்மா அப்பா, மாமியார் மாமனார் மற்றவர்கள் எல்லோரும் ஆரோக்கியத்தோடு இருப்பார்கள். நீங்கள் உங்கள் வீட்டின் மகாலட்சுமியாக திகழ்வீர்கள்.

இத்தனை அம்சங்களையும் உங்களுக்குப் பெற்றுத் தரப் போகும் அந்த ஒரு வரி மந்திரத்தின் அற்புதத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம். வெள்ளிக்கிழமை காலையில் எழுந்தவுடன் நிலை வாசலை கதவை திறக்கும் போதே இந்த மந்திரத்தை சொல்லுங்கள். மந்திரம் மந்திரம் என்று சொல்கிறீர்களே, அந்த மந்திரம் என்ன அதை இன்னும் சொல்லவில்லையே என்று யோசிப்பது தெரிகிறது. இதோ மகாலட்சுமிக்கு பிடித்த ஒரு வரி மந்திரம்.

- Advertisement -

மகாலட்சுமிக்கு சொந்தமான ஒரு வரி மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ

இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் உச்சரிக்கலாம். நிலை வாசல் கதவை திறக்கும் போது சொல்லுங்க, பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது உச்சரியங்கள். வெள்ளிக்கிழமை பிரசாதம் செய்யும்போது இந்த மந்திரத்தை மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு, பால் பாயாசம் செய்யுங்கள். பூஜை அறையில் மகாலட்சுமிக்கு பூ வைக்கும் போது இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: துரதிர்ஷ்டம் விலக பரிகாரம்

கற்பூர ஆரத்தி காட்டும்போது இந்த மந்திரத்தை சொல்லுங்கள். சாம்பிராணி புகையை வீடு முழுவதும் காட்டும்போது இந்த மந்திரத்தை சொல்லுங்கள். வெள்ளிக்கிழமையும் இந்த மந்திரத்தையும் பெண்களையும் பிரிக்கவே பிரிக்காதீர்கள். இந்த மூன்றும் ஒன்று சேரும் போது உங்களுடைய குடும்பத்திற்கு அபரிவிதமான நல்லது நடக்கும். முயற்சி செய்து பாருங்கள் 5 வெள்ளிக்கிழமை இந்த மந்திரத்தை உச்சரித்த பின் உங்கள் வீட்டில் நடக்கும் நல்ல மாற்றத்தை நீங்களே கண்கூடாக காணலாம்.

சற்று முன்