- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilபித்தத்தை குறைத்து நரைமுடி பிரச்சினையை தீர்க்கும் விதைகள்

பித்தத்தை குறைத்து நரைமுடி பிரச்சினையை தீர்க்கும் விதைகள்

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உடல்வாகு இருக்கும். அதை சித்தர்கள் மூன்று வகைகளாக பிரித்தனர். பித்தம், கபம், வாதம் இந்த மூன்றும் ஒருவருடைய உடலில் சரிசமமாக இருக்கும் பொழுது அவர்களுக்கு எந்தவித நோயின் தாக்குதலும் ஏற்படாது. இதில் அதிக அளவில் நம்முடைய தலைமுடிக்கு பிரச்சினை தரக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் பித்தம். பித்தம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் விரைவிலேயே நரைமுடி பிரச்சினை என்பது ஏற்படும். பித்தம் அதிகமாக இருக்கும் பொழுது நம் தலைமுடியில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சித்தர்கள் சொன்ன விதைகளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

இந்த விதைகள் அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய விதைகள் தான். இதை நாமும் தனியாக சேகரித்தும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை சேகரிப்பதில் எந்தவித கஷ்டமும் இருக்காது. இந்த விதைகளை நாம் பயன்படுத்தும் பொழுது நம் உடலில் இருக்கக்கூடிய பித்தத்தின் அளவானது குறைய ஆரம்பிக்கும். அதோடு மட்டுமல்லாமல் உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளும் குறையும். தலைமுடி ஆரோக்கியமாகவும் திகழும்.

- Advertisement -

சித்தர்கள் சொன்ன அந்த ஐந்து விதைகள் வேப்பம் பித்து, அதாவது வேப்பங்கொட்டை, காய்ந்த நெல்லிக்காய், விரலி மஞ்சள், கடுக்காய், மிளகு இவை அனைத்துமே சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். கடுக்காயை முழுமையாக வாங்கினால் அதற்குள் இருக்கும் விதையை நீக்கி விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். சரிசமமாக எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரித்துக்கொள்ளுங்கள்.

இதை வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு பயன்படுத்துவதன் மூலம் பித்தத்தால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். உடல் சூடு குறையும். இதனால் ஏற்படக்கூடிய முடி தொடர்பான பிரச்சனைகள் அனைத்துமே நீங்கும். மேலும் இதை நாம் உபயோகப்படுத்துவதால் சளி பிடிக்கும் என்று எந்தவித பயமும் தேவையில்லை. முடி ஆரோக்கியமாக வளருவதற்கு இவை அனைத்துமே துணை செய்யும். பொடுகு, பேன் தொல்லை எதுவுமே இருக்காது.

- Advertisement -

இப்பொழுது இந்த பொடியை பயன்படுத்தி எப்படி ஹேர்பேக் தயார் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். பொடியை தயார் செய்து வைத்த பிறகு நம்முடைய தலைமுடிக்கு தேவையான அளவு பொடியை ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக ஐந்து ஸ்பூன் அளவிற்கு பொடியை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அதில் ஒரு கப் அளவிற்கு பாலை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இவ்வாறு கொதிக்கும் பொழுது அது சிறிது கெட்டியாகி ஹேர் பேக் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு நன்றாக ஆரவிடுங்கள்.

இதனுடன் விட்டமின் இ கேப்சூல் ஒன்றையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள். இது நன்றாக ஆரிய பிறகு இதை உங்களுடைய தலைமுடியின் வேர்க்கால்களில் நன்றாக படும் அளவிற்கு தேய்த்து விட்டு மீதம் இருக்கும் ஹர்பேக்கை உங்களுடைய முனி முடியிலும் தடவி நன்றாக அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு எப்பொழுதும் போல் ஷாம்பூ அல்லது சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளித்து விடுங்கள். இந்த முறையில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தலைமுடிக்கு இந்த ஹேர் பேக்கை பயன்படுத்துவதன் மூலம் அனைத்து விதமான தலை முடி தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

இதையும் படிக்கலாமே: நரைமுடி மாற தேங்காய் எண்ணெய்

சித்தர்கள் சொன்ன இந்த அரு மருந்தை வீட்டில் இருக்கும் அனைவரும் பயன்படுத்தி வர அவர்களுடைய உடலும் ஆரோக்கியமாக இருக்கும் தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். விருப்பம் இருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

சற்று முன்